யாப்பிலக்கணம்328
தய்யச் சந்தம் வந்து விடுகிறது, இது தந்ததனதன ஆகாமல் தந்தய்ய தனன ஆகிவிடுவதால் குத்தல் குற்றம். இவ்வாறே உயிர்உய் - தனன; மாறுபுரி - தானதன; உயிருய்மாறுபுரி- தனனதானதன ஆகாமல் தனதய்யாதனன ஆதல் குத்தலாம். இடையின மெய்யோடு மெல்லின உயிர்மெய் சேருவதை விட வல்லினம் சேர்ந்தால் குத்தல் நன்கு தெரியும்,
(469)
71.தத்தன எனலும் தந்தத்த எனலும்
 தனத்தா என்றிடல் ஆதிய பிறவும்
 தொடர்ச்சி இயல்புஎனச் சொல்வது முறையே
தத்தன, தந்தத்த, தனத்தா என்பனவற்றையும், இவை போல்பவை அனைத்தையும் சந்தங்களின் தொடர்ச்சி எனக் கூறுதல் மரபாம் என்றவாறு,
தத்தச் சந்தத்தோடு ஒரு குறிலோ அல்லது ஒரு குறிலுடன் இடையின மெல்லின மெய்யோ சேர்ந்து தத்தன என வருகிறது. (கற்பனை, நற்றமிழ்) ஆதிய என்றதனால் தந்தன, தய்யன, தன்னன, தனன, தாத்தன, தாந்தன, தானன என்பனவற்றையும் கொள்க, தத்தனா முதலியவையும் இதில் அடங்கும்,
தந்தச் சந்தத்தோடு ஒரு வல்லொற்றும் குறிலும் இடையின, மெல்லின மெய்பெற்றும் பெறாமலும் சேர்ந்து தந்தத்த ஆகிறது (தென்றிக்கில், இன்றைக்கு) தத்தத்த முதலியனவற்றையும் இதில் அடக்குக,
தனச் சந்தத்தோடு ஒரு வல்லொற்றும் நெடிலும் இடையின, மெல்லின மெய் பெற்றும் பெறாமலும் கூடி தனத்தா ஆகும். (பணத்தால், சிறப்பா) தத்தத்தா முதலியவற்றையும் ஆதிய என்றதால் இதில் அடக்குக.,
இவைகள் எல்லாம் ஒரு சந்தத்தோடு மற்றுமொரு முழுச் சந்தம் சேராமல் ஒரு பகுதி தொடர்ந்து இணைந்து வந்தன எனவே தொடர்ச்சி இயல்பு எனப்பட்டது,
(470)