அறுவகையிலக்கணம்329
72.தத்தவில் தாத்தவும் தந்தவில் தாந்தவும்
 தனவில் தானவும் பிறந்த வாறு
 தன்ன தய்யவி்ல் வரும்என மருளாது
 அம்முறை தோற்றலும் தானச் சந்தம்
 தான்எனத் துணிவுறத் தகும்தகும் தகுமே.
தத்த, தந்த, தன என்ற சந்தங்களில் முதல் எழுத்து நெடிலானால் முறையே தாத்த, தாந்த, தான வண்ணங்கள் தோன்றுகின்றன, இவ்வாறே தன்ன, தய்யச் சந்தங்களிலும் முதல் எழுத்து நீண்டால் அவை முறையே தான்ன, தாய்ய ஆம் என மயங்கலாகாது, அவ்வாறு (முதல் நீண்டு) வருவனவும் தானச் சந்தமேயாகும்; வேறன்று என்றவாறு,
நன்மை-தன்ன; நான்மை-தான்ன அன்று; தானச்சந்தமே
வெல்கை-தய்ய;வேல்கை-தாய்யஅன்று; தானச்சந்தமே,
நெடிலை அடுத்த இடையின மெல்லின மெய்கள் ஒலிப்பதில்லை, எனவே இவை தானச் சந்தமாயின, “நெடிலோடு இடையின மெய்யும் குறிலும் தான ஆம் எனச் சாற்றுதல் முறையே”1 “நெடிலும் மெல்லினத்துஒற்றும் அவ்வினத்தோடு இடையின மென்னும் இவற்றுஓர் உயிர்மெய்க் குறிலும் சேர்ந்து குலவினும் தானவே”2 என்பன வண்ணத்தியல்பு நூற்பாக்கள்,
துணிவுபற்றித் தகும் என மும்முறை கூறினார்,
(471)
73.ஒவ்வோர் வண்ணமும் சிற்சில சொற்கொளும்;
 அவற்றுள் தனவில் சுருக்கமும், தானவில்
 பெருக்கமும் இலைஎனப் பேசத் தகுமே,
(எட்டுச் சந்தங்களும்) ஒவ்வொன்றும் சிற்சில அசைகளைக் கொள்ளும், அவைகளில் தனச்சந்தம் வரும் எழுத்தமைதியே மிகக் குறைந்ததாகும்., தானச் சந்தம் பிறக்கும் எழுத்தமைதியே அனைத்திலும் மிக அதிகமாகும் என்றவாறு,