குறில் இரண்டு இசைதல், இதனோடு மெல்லின அல்லது இடையின மெய் சேர்தல் என்ற இருவகையான எழுத்துப் புணர்ப்பான் மட்டுமே தனச் சந்தம் தோன்றுகிறது, (குரு, தவர், சுதன்) |
ஆனால் தானச் சந்தமோ எனில்- |
1.நெடில் குறில் இணைதல் (காது) |
2.இதனோடு மெல்லின அல்லது இடையின மெய் சேர்தல்(பாதம், சூதர்) |
3.நெடில், இடையினமெய், குறில் வருதல் (கேள்வி) |
4.இதனோடு மெல்லின அல்லது இடையின மெய் சேர்தல்(சார்கண், கூர்முள்) |
5.நெடில், மெல்லினமெய், மெல் அல்லது இடையினத்தைச் சேர்ந்த |
உயிர்மெய்க் குறில் வருதல், (மான்மி, தேன்வி |
6.இதனோடு மெல் அல்லது இடையின மெய் சேர்தல் (மாண்மன், கூன்வில்) |
இரண்டே இரண்டு வகையான எழுத்துக் கூட்டத்தால் தனச்சந்தம் வருகிறது, இதைவிடக் குறைவான அமைப்பு இல்லை. இவ்வாறே ஆறுவகையாக வரும் தானச் சந்தத்தை விட அதிகமான அமைப்பும் இல்லை. |
இந் நூற்பாவில் சொல் என்னும் பதம் அசை என்ற பொருளில் வந்தது, இந் நூலாசிரியர் இச்சொல்லை இப்பொருளில் ஆளலை முன்பே கண்டோம். 2(472) |
74. | தனவும் தானவும் எளிதினும் எளியன; | | தத்தவும், தந்தவும் எளியன; தாத்தவும் | | தாந்தவும் வலியன; தய்யவும் தன்னவும் | | வலிதினும் வலியன என்பது வழக்கே. |
|