யாப்பிலக்கணம்332
சுவாமிநாதம் இவ்வண்ணப்பாடலின் இலக்கணத்தைத் “தலைவனக்கு நாற்கலையும் பொருட்குஉறை நாற்கலையும் சந்தம் இட்டு மும் மூன்று துள்ளலும்தொங்கலும்ஆம் கலைகள் எட்டாம் வண்ணம்”1 எனச் சுட்டிக் காட்டுகிறது.
(474)
76.அடிகளின் ஈற்றுக் குழிப்புச் சிதைவுறத்
 தொடுத்தல் மிகைபடும் வாய்பாடு; ஆயினும்
 திருந்தக் கூறிடல் சிறப்பினுட் சிறப்பே,
ஒவ்வொரு கலையின் கடைசியில் வருகின்ற சொல்லை எடுத்துக் கொண்ட குழிப்புக்கு ஏற்றதாக அமைக்காமல்- பெரும்பாலும் நெடிலுக்குப் பதில் குறிலாக - சிதைவுறும்படி இயற்றுதல் பெரிதும் பழக்கத்தில் உள்ளது. ஆன்றோர் ஆட்சி இவ்வாறு இருப்பினும்கூட அங்கும் குழிப்புச் சிதையாமல் சொற்களை அமைப்பதுதான் சாலச் சிறந்ததாகும் என்றவாறு,
ஓர் உதாரணம் காண்போம், “தானாத் தனதானா” என்ற சந்தக் குழிப்பில் அருணகிரிநாதர் அருளியது கீழ்க்கண்ட திருப்புகழ்,
தீராப் பிணிதீர சீவாத் துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக் கிரிராசா
பேராற் பெரியோனே பேரூர்ப் பெருமாளே,2
இத் திருப்புகழில் தனதானா என முடியவேண்டிய எட்டு கலைகளுள் பிணதீர, துமஞான, சியதான என்னும் மூன்று தனதான எனக் குறிலாக முடிந்துள்ளன. இசைக்கும் போது அது நீட்டி இசைத்துச் சரிசெய்து கொள்ளப்படும். அருணகிரிநாதரின் திருப்புகழில் அநேகமாக எல்லாப் பாடல்களிலும் இத் தன்மையைக் காணலாம்,
இவ்வாசிரியர் இவ்வாறு வருவது தவறு என்று கூறவில்லை, தமிழ் யாப்பில் குறிலே நெடிலாக ஒலிக்கும் இடங்கள் உண்டு