என்பதை இவர் அறிவார். என்றாலும் நெடிலாக ஒலிக்க வேண்டிய நிலை ஏற்படாமல் நெட்டெழுத்தாகவே அமைந்தால் மிகச் சிறப்பு எனப்படுகிறது. குறில் நெடில் மாற்றத்தோடு கலையின் ஈற்றில் குழிப்பில் இல்லாத மெல்லொற்று வருதல், வல்லொற்று வருதல் போன்றனவற்றையுஞ் சேர்த்துக் குழிப்புச் சிதைவுற என்றார். கீழ்க்கண்ட திருப்புகழில் அச்சிதைவைக் காணலாம், |
களப மொழுகிய புளகித முலையினர் |
கடுவு மமிர்தமும் விரவிய விழியினர் |
கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் எவரோடுங் |
கலக மிடுகய லெறிகுழை விரகியர் |
பொருளி லிளைஞரை வழிகொடு மொழிகொடு |
தளர விடுபவர் தெருவினில் எவரையும் நகையாடிப்1 |
தனன தனதன தனதன தனதன ...... தனதானா என்ற குழிப்பில் தனதானா வருமிடத்தில் ‘எவரோடுங்’, ‘நகையாடிப்’ என்று ஒலியோடு கூடிய ஒற்றடுத்து வந்து சிதைவாயிற்று, (475) |
77. | கொடுந்தமிழ்ப் புணர்ச்சி வண்ணம் ஆயினும் | | பொருட்சுவை யாதிய நலம்பல பொருந்தில் | | தமிழ்க்கடற் குளிப்பவர் தழுவல்சற் றுளதே, |
|
எளிதிற் பொருள் விளங்காத அளவு கருகலான சொற்களால் அமைந்த வண்ணப்பாவாக இருந்தாலும் சொற் பொருளில் சுவை, சந்த அமைதி, கூறப்பட்ட பொருளின் சிறப்பு போன்ற சிறந்த அம்சங்கள் பொருந்தியிருந்தால் தமிழ் இலக்கியத்தில் மூழ்கிக் களிக்கும் பேரறிஞர் அதனை ஓரளவு மகிழ்ந்து ஏற்றுக்கொள்வர் என்றவாறு. |
வண்ணப்பாவில் பயிலும் சொற்கள் வெண்சொற்களாகவும், செஞ்சொற்களாகவும் இருத்தல் வேண்டும். எளிதில் பொருள் புரிய வேண்டும். “புகரப் புங்கப் பகரக் குன்றிற் |
|