யாப்பிலக்கணம்334
புயலிற் றங்கிப் பொலிவோனும்”1 என்பதுபோல் அரிதின் முயன்று பொருள் காணக் கூடியனவாக இருத்தலாகாது. வண்ணத்தியல்பு இக்கருத்தை - வண்ணத்தில் விலக்கப்பட வேண்டிய பிறவற்றுடன் சேர்த்துப் பின்வருமாறு கூறுகிறது. “வண்ணத்து அளவில் வடமொழி, மரூஉச்சொற் புல்லினும்-பொலிவு குன்றலும், குழிப்புச் சிதைவும், கொடுந்தமிழ்ப் புணர்ப்பும், அளபெடைச் சேர்க்கையும் ஆகாது அன்றே.”2
சில சந்தப்பாடல்களில் இத்தகைய கருகிய சொல்லாட்சி இருந்தால் அவை வேறு சிறப்புகளைப் பெற்றிருக்குமேல் அதற்காக அவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதே என்கிறார். தழுவல் சற்று உளதே என்றதனால் அப்படி வராமல் இயற்றுவதுதான் சிறப்பு எனக் குறிப்பால் வலியுறுத்தப் படுவதாயிற்று,
(476)
78.மதுரம் குன்றிக் கிடப்பினும் வைத்துள
 குழிப்பும் பிறழா வண்ணம் குளறிடில்
 அஃதுணர் புலவர்சற்று அகம்மகிழ் வாரே,
சொல் இனிமை, பொருளினிமை குறைந்திருந்தாலும் எடுத்துக் கொண்ட சந்தக் குழிப்பு சற்றும் தவறாதபடி, ஏதோ ஒன்றை ஒருவன் உளறியிருந்தாலும் சந்தப்புணர்ச்சியின் அருமையை அறிந்தவர்களாகிய மெய்ப்புலவர்கள் கொஞ்சம் மகிழ்ச்சியடைவர் என்றவாறு.
மதுரங் குன்றல் விலக்கப்பட்டதை மேலே காட்டினோம், அப்படிச் சுவை குறைந்திருந்தாலும் குழிப்புச்சிதைவு இல்லாமல் இயற்றின் புலவர் மகிழ்வர் என்கிறார். அஃது என்பது சந்தப் பாடல்களின் இயல்பையும் அதனை இயற்றுவதில் உள்ள சிரமத்தையும் குறித்தது. சுவையற்ற பாடல் ஆதலின் குளறிடில் என்றார், இதனால் குழிப்பிற்கமையப் பாடுவதன் அருமை உரைக்கப்பட்டது, இனிமையற்றவைகளைக் குளறுதல் என்று கூறி குறிப்பால் விலக்கினார்.
(477)