மற்றொன்றும் கவனிக்கப்பட வேண்டும். நல்ல புலமை எய்தியவர்கள்வண்ணம் பாடுவதற்கு வழிகாட்டியாக அமைந்த சிறப்பு இலக்கண நூல் வண்ணத்தியல்பு. இது “எழுத்தும் பல்வகை எதுகைச்சொல்லும், பன்னரும் பொருளும், பழிப்பில் யாப்பும், வாய்பாட் டணியும் வழுவற வுணர்ந்தோர், ஏவலின் முயல்வோர், எழிற்றவம் நோற்போர், முருக வேளே முதல் எனத் தெளிந்தோர், மலய மால்வரை வந்தனம் புரிவோர் அனையவர் தமக்கே அழுக்கிலா தமைந்து குலவுசீர் வண்ணம்”1 என்பதனால் அறியப்படும். ஆனால் இந்த நூல் புலமையைப் பெற முயல்பவர்களுக்குரிய பொதுநூலாகும், | பொதுநூல்கள் சிறுசிறு வித்தியாசங்களையும் பாராட்டாது தழுவிச் செல்வதும், சிறப்பு நூல்கள் மிகத் தெளிவானதும் கடுமையானதுமான வரையறை வகுப்பதும் அனைத்துக் கலைகளுக்கும் பொதுவான ஒன்று. அது பற்றியே இந்நூலாசிரியர் பொதுநூலில் அதிகாரி பேதம் நோக்கிச் சில குறைபாடுகளைத் தழுவி ஏற்றும் சிறப்பு நூலில் அவற்றை முற்றிலும் விலக்கியும் கூறினார். இதில் முரண்பாடின்மை அறிக, (479) | 81. | ஓசையும், கனமும், உலவா ஊக்கமும், | | தொண்டும் தோய்வுறீஇத் துலங்கிய வண்ணம் | | அந்நூல் ஒப்பிட லாயகுற் றங்களும் | | இல்லாது உறும்எனில் ஏற்றத்து ஏற்றமே, |
| குழிப்புச் சிதைவற்ற சந்தவோசை, பாடுபொருளின் சிறப்பு, இத்தகைய பாக்களை மேலும் மேலும் படிக்கத் தூண்டும் ஊக்கம், இறைபணியில் ஈடுபடவைத்தல் ஆகியவற்றைப் பெற்று விளங்கும் சந்தப்பா வண்ணத்தியல்பு தழுவி ஏற்றுக் கொண்ட வடமொழி மருவுதல், மருஉச் சொல் பயிலுதல் என்னும் இரு குற்றங்களும்கூட இல்லாமல் அமையுமாகின் அது சிறந்தவற்றுளெல்லாம் சிறந்ததாகும் என்றவாறு, | இங்கு குறிப்பிடப்பட்ட வண்ணத்தியல்பு நூற்பா இந்நூல் 77 ஆம் சூத்திர உரையில் காட்டப்பட்டுள்ளது. கற்பவர்களின் | |
|
|