அறுவகையிலக்கணம்337
ஊக்கமும் தொண்டும் நூலின் மேலேற்றிக் கூறப்பட்டன. எவ்வகைக் குற்றமுமின்றி வண்ணம்பாடுதலின் அருமை விளங்க ”உறும்எனில்” என்றார்,
(480)
82.இம்முறை யாவிம்முன் எடுத்துக் காட்டிய
 நூற்பொருள் உணர்ந்துள நுண்ணியர்க்கு உவகையும்
 மற்றவர்க்கு உலவா மயக்கமும் தருமே,
வண்ண இயல்பாகிய இப் பகுதியில் கூறப்பட்டுள்ள இலக்கணங்கள் எல்லாம் வண்ணத்தியல்பு நூலில் கூறப்பட்டுள்ள இலக்கணங்களை ஐயந்திரிபற அறிந்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சியையும், அதனைக் கல்லாதவர்களுக்குத் தீராத குழப்பத்தையும் உண்டாக்கும் என்றவாறு,
வண்ணத்தியல்பு நூலைத் தெளிவாகக் கற்றுணர்ந்தவர்களுக்கே இப்பகுதி நன்கு விளங்கும். எனவே அதைக் கற்றுணர்ந்த பிறகுதான் இதை ஆராய வேண்டும். இல்லையேல் குழப்பம் உண்டாகும் என்கிறார்.
(481)
83.கருணைக் கடல்எனச் சக்திவேல் என்ன
 வென்றி மழுவெனத் துவக்கிஓர் மூன்று
 வண்ணம் இவற்றினுக்கு இலக்கியம் என்றே
 கருதிக் கூறினம்; மற்றும் பற்பல
 வண்ணமும் வகுப்பும் விருத்தமும் பகர்ந்துளம்;
 அவைகளும் துணையாம் அறியவேண் டுநர்க்கே.
அகப்பொருள் துறைபெற்ற வண்ணத்திற்கு இலக்கியமாகக் கருணைக்கடல், சத்திவேல், வென்றிமழு எனத் தொடங்கும் மூன்று வண்ணங்களை இயற்றியுள்ளோம். இவையேயன்றி வேறு பல வண்ணங்களும், வகுப்புகளும், திருப்புகழ்களும், சந்த விருத்தங்களும் யாத்துள்ளோம். வண்ண இலக்கணத்தைக் கற்கும் ஆவல் உடையவர்களுக்கு அவையும் இலக்கியங்களாகப் பயன்படும் என்றவாறு,
கருணைக்கடல் - திருவுருமாமலை முருகனைப் போற்றிக் கலவிமகிழ்தல் துறையில் பாடப்பட்ட வண்ணம். “கருணைக் கடலாகிய சங்கரர்” என்ற தொடக்கத்தை உடையது,