அறுவகையிலக்கணம்341
மாமியேசிட நாளுமேதுயில்
சோகமாதியும் எண்ணியசேய்கொல்
      பாவாணர் வாய்துதித்த தாதையார்
சித்திமார்மனை சென்றன ராமவர்
இட்டவேலைபு ரிந்தவர் பூவணை
    மீதிலேவிளை யாடினாரென
    ஓதினார்பலர் என்னசெய்மாறு
சற்றுவாடினு முன்சகி யாதவர்
நத்தினாலுமி ணங்குகி லாரெனொ
    டாதிநாளையில் ஆணையாயிரம்
    ஓதினாரிது புண்ணியமோசொல்
செக்கர்வானொடு திங்களும் ஆழியும்
மிக்குவேளும்மு னைந்திடும் வேளையில்
    நீயும்வாய்விட லாகுமோசனி
    யானபாவியும் உன்னையொவான்மெய்
      சேராத கேள்வர்நட்ப ராவரோ
செட்டிபோலஇ ருந்தவர் வேசியர்
ஒட்டமீவது கண்டனை யேபல
    பாலரீனிய மாதர்தோள்புணர்
    வாரும்வாழ்வுறும் இந்நிலமீது
கட்டுமீறும்உ டம்புள நான்உனை
யிட்டுவாடுவ துந்தெரி வாய்ஒரு
    காலம்நீயவர் ஆசையால்மடி
    மீதிலேகொள நன்மொழிகோடி
செப்புவாயென நம்பினன்; வேதியன்
இட்டதோர்விதி யென்செயு மோவினி
    வேறுதாரகம் ஏதுநீயல
    தாகையாலொரு நன்னலமோது
      தீராத காதல்வெப்பம் ஆறவே,
ஒரு வண்ணத்தின் எட்டு தொங்கல்களையும் தனியே வரிசையாகத் தொகுத்தால் அது எதுகை மோனையுடனும் பொருள் தொடர்புடனும் கூடிய சந்தப்பாட்டாக அமையும், அது தொங்கல்களின் தொகுப்பாதலால் தொங்கற்றாழிசை