அப்படியே அம்மூன்றிற்கும் பொதுவாகத் திகழ்கின்ற வண்ணத்திலும் ஆராய்வது தக்கதாகும் என்றவாறு, |
வண்ணத்தை இயல்போல் படித்து மகிழலாம். தாளக் கட்டுடையது ஆதலின் இசைத்தும் இரசிக்கலாம். பாவச்செறிவோடு இருத்தலின் நாட்டியத்திலும் பயன்படுத்தலாம். எனவே இது மூன்றிற்கும் பொதுவாயிற்று. |
|
அணிகெடல் - சொற்பொருள் குற்றத்தையும், குத்தல் - ஓசைக் குற்றத்தையும் சுட்டிநின்றது. இந்நூற்பாவால் தமிழ் யாப்பிலக்கணத்தில் இடம்பெற்றுள்ள இலக்கண இலக்கியக் கொள்கைகள் யாவும் வண்ணத்திற்கும் பொருந்தும் என்பது பெறப்பட்டது. (484) |
86, | தமிழ்க்கவி அனைத்தினும் தலையென்று உள்ள | | வண்ண இயல்பினை வகுத்தனம்; மோனை | | இயல்பினைச் சுருக்கி இயம்புகின் றனமே. |
|
தமிழ் யாப்பு வகைகள் எல்லாவற்றிலும் முதன்மையாக விளங்குகின்ற வண்ண இலக்கணத்தை வகுத்துக் கூறினோம். இனி அடுத்த மோனை இலக்கணத்தைச் சுருக்கமாகக் கூறுவோம் என்றவாறு. |
வண்ணத்தின் இலக்கணத்தை இம்முறையில் முதன்முதல் கண்டவர் இவரே ஆதலின் வகுத்தனம் என்றார். முன்பே மோனை இயல்பு பல நூலாசிரியர்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதாதலின் சுருக்கி இயம்புகின்றனம் என்றார். |
இந் நூற்பாவால் வண்ணவியல்பாகிய இப்பகுதி நிறைவு செய்யப்பட்டு அடுத்த மோனை இயல்பிற்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்பட்டது. (485) |
வண்ண இயல்பு முற்றிற்று, |
மற்ற யாப்பியல் நூல்கள் தொடை எனப் பிரித்துப் பாகுபாடு செய்துகொண்ட மாதிரி இவர் செய்துகொள்ளவில்லை, |