அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு, இவர் எதுகையோடு மோனையையும் யாப்பு வடிவத்தின் இன்றியமையாத உறுப்பாகவே கருதுகிறார். “மோனை இல்லா முத்தமிழ்ப் பாட்டு நாணம் இல்லா நங்கையொப் பாமே”1 என்பது இவர் கருத்து. இவர் யாப்பியலில் செந்தொடை எனப்படுவதற்கு இடமே இல்லை. இவ்வியல்பில் மோனையைப் பற்றிக் கூறப்படுகிறது. இது பன்னிரண்டு நூற்பாக்களா னியன்றது, |
87. | அகரக் குறில்நெடில் ஐஒள என்னும் | | நான்கும்ஓர் மோனை நன்குஉணர் வார்க்கே. |
|
அ,ஆ,ஐ,ஒள ஆகிய நான்கு எழுத்துகளும் சரியாக உணரவல்லார்க்கு ஓர் மோனையாகும் என்றவாறு. |
“அகரமோ டாகாரம் ஐகாரம் ஒளகாரம் |
இகரமோ டீகாரம் எஏ - உகரமோடு |
ஊகாரம் ஒஓ ஞநமவ தச்சகரம் |
ஆகாத அல்ல அனு”2 |
என்ற அமுத சாகர விதி இவரால் பெரும்பான்மையும் அப்படியே கூறப்பட்டுள்ளதை இவ்வியல்பில் காணலாம். (486) |
88. | இகர எகரமும் இவற்றின் நெடில்களும் | | யகரயா காரமும் இசையும் மோனைக்கே. |
|
இ,ஈ,எ,ஏ,ய,யா இவைகள் ஒன்றற்கொன்று மோனையாகப் பொருந்தும் என்றவாறு, |
மேற்காட்டிய வெண்பாவில் இடம் பெறாத ய, யாக்கள் இங்கு மோனையாக ஏற்கப்பட்டுள்ளன. “இயங்குவ நிற்பவான யாவையுங் கலைமா தோடு”3 “யாற்றுள் வீழ்வுற்று இறப்பதற்கு எண்ணுற”4 “ஏதிலான் போல நின்றான் |
|