அறுவகையிலக்கணம்345
யார்கணும் பந்தம் இல்லான்”1 என்பன போன்ற இலக்கிய வழக்கு நோக்கி இவ்விலக்கணம் எழுந்தது.
(487)
89.உகரமும் ஒகரமும் யொகரமும் நெடில்களும்
 ஒருவகை மோனைஎன்று உரைப்பார் உணர்ந்தோர்.
உ,ஊ,ஒ,ஓ,யொ,யோ இவ்வாறும் ஒன்றற்கொன்று மோனை எழுத்தாக வரும் எனப் புலவர் கூறுவர் என்றவாறு,
இங்கும் யொ, யோ புதியதாகப் புகுந்துள்ளன. தமிழ் இலக்கியத்தில், “ஓடியொ ளித்தனர் ஆடம ரிற்றுரி யோதனனுக்கிளையோர்”2 “யூகம் சருப்ப தோபத்ர மாக வணிசெய்து மான உரவோன்”3 “யூகமும்பி ளந்துசுர ராசன்மைந்தன் முந்திரதம் ஊருகின்ற செங்கண்நெடுமால்”4 எனப் பயிலப்பட்டமை காண்க. யொ, யோ வரின் யு, யூ அவற்றுடன் இணைந்து வருதல் இயல்பே.
(488)
90.உயிர்ப்பொறி மோனையின் ஒழுங்கு பற்றி
 உயிர்மெய்ப் பொறிகளும் ஒளிர்தரும்; அத்துடன்
 அவற்றின் வருகத்து ஒன்றோ டொன்று
 பொருந்தல்உண்டு; அம்முறை புகலுதும் அன்றே.
உயிர் எழுத்துகளின் முறையிலேயே உயிர்மெய் எழுத்துகளும் ஒன்றற்கொன்று மோனையாக வரும். மேலும் உயிர் மெய்களிலும் சில ஒன்றற்கொன்றுமோனையாகப் பொருந்தும். அவை யாவை என்பதைக் கூறுவாம் என்றவாறு,
அ,ஆ,ஐ,ஒள ஒன்றற்கொன்று மோனை என்றால் அதே முறைபற்றிக்க, கா, கை, கௌ போன்றனவும் பொருந்தும் என்று கூறப்பட்டது. இவ்வாறு வருதலோடு உயிர் மெய்களிலும் சில