யாப்பிலக்கணம்346
எழுத்துகள் பிறவற்றைத் தனக்கு மோனையாகவரப் பெறும். அவற்றை உரைப்பாம் என நுதலிப் புகுகிறார்.
(489)
91.சகரமும் தகரமும் அவற்றின் பிறவும்
 முறைமையிற் பிறழ்வது மோனை மரபே.
சகர வருக்கத்து எழுத்துகளும் தகர வருக்கத்து எழுத்துகளும் முன் உயிரெழுத்துகளுக்குச் சொல்லப்பட்ட விதிப்படியே பிறழ்ந்து ஒன்றற்கொன்று மோனையாக வருதல் இலக்கிய வழக்கு ஆகும் என்றவாறு,
ச,சா,சை,சௌ,த,தா,தை,தௌ என்பன ஒரே மோனை,
சி,சீ,செ,சே,தி,தீ,தெ,தே என்பன ஒரே மோனை,
சு,சூ,சொ,சோ,து,தூ,தொ,தோ என்பன ஒரே மோனை,
இவ்வாறே அடுத்த நூற்பாவிற்கும் கொள்க.
(490)
92.மகர வகர வருக்கமும் இயல்பில்
 தொடர்வது மோனையின் தொன்மை யாமே.
மகர வருக்கத்தைச் சேர்ந்த உயிர்மெய் எழுத்துகளும் வகர வருக்கத்துடன் முன் தகரசகரங்களுக்குக் கூறப்பட்ட முறையிலேயே மோனையாகப் பொருந்துதல் பழமையான மரபாகும் என்றவாறு,
தகர, சகர முறை முன் நூற்பாவில் காட்டப்பட்டது,
இவ்வியல்பின் முதல் நூற்பாவில் எடுத்துக்காட்டப்பெற்ற வெண்பாவில் இடம் பெற்ற ஞநக்களை இவர் இலக்கணத்தில் கூறவில்லை. ஆனால் இவரே பல இடங்களில் அவற்றை மோனையாகக் கொண்டுள்ளார். உதாரணத்திற்குச் சில “ஞான பண்டித னாமென நண்ணுவார்”1 “நல்வரத்தினர் புகழ் ஞானச் சேரமான்”2 “ஞாயமெடுத் துரைத்தாலும் அவர்க்கொப்பாக நவிலல்பிழை என்றிகலும் நரர்எல்லோரும்”3