இவ்விலக்கியங்களைக் கண்டு ஞநக்களையும் ஒன்றற்கொன்று மோனையாக உரையிற் கோடலாகக் கொள்ளலாம், (491) |
93. | அகரமும் யகரமும் அணைவதும், றகரமும் | | ரகரமும் லகரமும் தொடர்வதும் நாடகத் | | தமிழிற்கு ஆம்எனச் சாற்றுநர் சிலரே, |
|
அகர யகரங்களும்., ற,ர,ல ஆகிய மூன்றும் தம்முள் மோனையாகப் பொருந்திவருதலை நாடகத்தமிழில் ஏற்றுக் கொள்ளலாம் எனச் சிலர் சொல்வார்கள் என்றவாறு, |
நாடகத் தமிழிற்கு ஆம் விதந்தோதியதால் இயலிசைத் தமிழிற்கு ஆகா என்பதும், அங்கும் ஏற்பார் சிலர் என்றமையின் ஏற்காமையே சிறப்பு என்பதுவும் பெறப்பட்டது, (492) |
94. | உயிர்எழுத்து அதனையே ஒற்றின் புணர்ப்பால் | | உயிர்மெய் ஆக்கி உரைக்கும் மோனையும், | | ஒருசொல் நடுஉறும் உயிர்மெய் மோனையும் | | நிலையிடந் தவறி நிற்கும் கூழை | | மோனையில் நலமாம்; ஆயினும் அவற்றைக் | | கள்ளமோ னைகள்எனக் கழறத் தகுமே, |
|
ஓர் ஒற்றின் மீதே உயிரெழுத்துகள் வேறுவேறு சேர்வதை மோனை என்று கூறுவதும், சீரின் முதலில் வராமல் இடையில் வருகின்ற உயிர்மெய் மோனையாவதும் ஆகிய இவ்விரண்டும் தான் நிற்கவேண்டிய சீரின்கண் நில்லாமல் மாறி நிற்கின்ற கூழையைவிடச் சிறந்ததேயாயினும் இவை அனைத்தையும் கள்ள மோனைகள் எனக் கூறுவதே தக்கவாம் என்றவாறு, |
“பகலேபல் பூங்கானல்” என்ற அகவலால் யாப்பருங்கலம் காட்டுகின்ற பகரமெய் வருக்கமோனை, அந்நூலிலேயே “கயலேர் உண்கண்”எனக்காட்டப்படுகின்ற வல்லின மோனை போன்றவற்றை முதல் ஈரடிகளால் குறித்தார்.1 இனம் பற்றித் |
|