அறுவகையிலக்கணம்349
இவ்வறுசீர் விருத்தத்தில் ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் மோனை நிற்க வேண்டும். ஆனால் மூன்றாவது நான்காவது அடிகளில் ஐந்தாஞ்சீரில் மோனை வந்தது. இவ்வாறு சீர்மாறி இருப்பவையே இவரால் கூழைமோனை எனப்படுகிறது.
இவை யனைத்திற்கும் கள்ளமோனைகள் எனப்பெயரிட்டதால் இத்தகையன அத்துணைச் சிறப்பு வாய்ந்தனவல்ல என்பது போதரும். இக்கருத்தை அடுத்த நூற்பாவில் தெளிவாகக் கூறிவிடுகிறார்.
(493)
95.உறும்இடத்து உற்றுஅரசு ஒக்கும் மோனை
 ஒன்றே நலம்என உன்னுநர் சிலரே.
ஒருக்கவேண்டிய இடத்திலும், இருக்கத்தகும் எழுத்தாலும் அமைந்து அரசனைப்போல் விளங்கும் மோனையை அமைப்பது ஒன்றுதான் யாப்பிற்குச் சிறப்பு எனக் கருதுபவர் சுவை உணர்வில் நன்கு முதிர்ச்சியடைந்த மிகச்சிலரே என்றவாறு.
அரசு ஒக்கும் என்ற உவமை பற்றி இடத்தோடு உரையில் எழுத்தும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. கவிதைச் சுவையில் மூழ்கி அதை நன்கு துய்க்க வல்லவர் சிலரேயாதலின் உன்னுநர் சிலரே என்றார். இதனால் தமிழ்யாப்பின் வடிவ ஒழுங்கிற்கு மோனை இன்றியமையாததென்று கூறப்பட்டது. இது அடுத்த நூற்பாவால் மேலும் விளக்கப்படுகிறது.
(494)
96.மோனை இல்லா முத்தமிழ்ப் பாட்டு
 நாணம் இல்லா நங்கையொப் பாமே.
இயல், இசை, நாடகம் ஆகிய எத்துறையைச் சேர்ந்ததாயினும் தமிழ்க்கவிதை மோனை நலம் இல்லாமலிருந்தால் வெட்கங்கெட்ட பெண்களைப் போன்றது எனச்சான்றோர்களால் பழிக்கப்படும் என்றவாறு.
(495)
97.தவறிய மோனைத் தமிழ்க்கவி கலவிக்கு
 இசைந்தபின் ஊடும் ஏந்திழைக்கு ஒப்பே.