உரிய இடத்தில் அமையாமல் வேறு இடத்தில் அமையப் பெற்ற மோனையைஉடைய தமிழ்ப்பா புணர்ச்சிக்கு இணங்கி, அதற்குப்பிறகு தன் கணவனுடன் ஊடல் கொள்கின்ற மங்கைக்கு நிகராகும் என்றவாறு. |
புணர்ச்சிக்கு இணங்காமல் ஊடுதல் அழகு. காதலனால் ஊடல் உணர்த்தப்பட்டு அது தீர்ந்த பிறகு கலவிக்கிசைந்தபின் மறுபடியும் ஊடல் தோன்றினால் இரசாபாசமாம். அது நேரந்தவறி வந்த ஊடல. எனவே இடந்தவறி வந்த மோனைக்கு உவமையாயிற்று. (496) |
98. | ஓர்அசை தொட்டுஐந்து அசைவரை உள்ள | | சொற்களின் கலப்பால் துலங்குபல் பாடலில் | | மோனைபோய் நிற்கும் மொழியெலாம் மொழியாது | | அடக்கி எதுகைசற் றறைகுதும் அன்றே. |
|
ஓரசை முதல் ஐந்தசை வரையில் பயின்றுவருகின்ற சீர்கள் உள்ளன. இச்சீர்கள் பல ஓர் அடியாக வந்து பா ஆகிறது. இத்தனை சீர் உள்ள இன்ன பாவில் இந்த இடத்தில் மோனை வரவேண்டும். என்றெல்லாம் விரித்து உரைத்துக் கொண்டு போகாமல் மோனை இயல்பை இத்துடன் நிறுத்திக் கொண்டு அடுத்து எதுகை பற்றியும் சில செய்திகளைக் கூறுவாம் என்றவாறு. |
இந்நூல் இயலிசைத் தமிழியல்பில் மோனை பற்றிய சில செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவற்றையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். இவரால் படைக்கப்பெற்ற ஏராளமான இலக்கியங்களைப் பார்த்தால் மோனை பற்றிய இவர் கொள்கைகள் நன்கு தெளிவாகின்றன. அவை வருமாறு:- |
1. நான்கு சீரால் வருகின்ற அடிகளுக்கு முதல் சீரிலும் மூன்றிலும் மோனை. |
2. ஐஞ்சீரடிகளுக்கு ஒன்றிலும் ஐந்திலும் மோனை. |
3. ஒரே மாதிரி இருமுறை வரும் அறுசீர்க்கு (விளம், மா, தேமா இருமுறை; மா, மா, காய் இருமுறை) ஒன்றிலும் நான்கிலும் மோனை. |