அறுவகையிலக்கணம்351
4.    நான்கு காய், மா, தேமா என வரும் அறுசீருக்கு ஒன்றிலும் ஐந்திலும் மோனை.
5.    பொதுவாக எழுசீருக்கு ஒன்றிலும் ஐந்திலும் மோனை.
6.    எழுசீருக்குமேல் போனால் மூன்று மோனை வர வேண்டும். அவை எண் சீர்களில் ஒன்று, ஐந்து, ஏழு ஆகிய சீர்களில் வரும்.
7.    இரட்டித்த ஆசிரியங்களுக்கு எதை இரட்டிக்கிறோமோ அதற்குக் கூறியதே பொருந்தும்.
8.    சந்தத்தில் முதல் துள்ளலிலும் மூன்றாம் துள்ளலிலும் மோனை நிற்பதோடு, முதற்கலையின் முதலெழுத்தும் அடுத்த கலையின் முதலெழுத்தும் மோனை பெற்று வரவேண்டும். இது வகுப்பு, வண்ணம், திருப்புகழ் ஆகிய மூன்றற்கும் பொருந்தும்.
இந் நூற்பாவால் மோனை இயல்பை நிறைவுசெய்து அடுத்த எதுகை இயல்பிற்குத் தோற்றுவாய் செய்து கொள்கிறார்.
மோனை இயல்பு முற்றிற்று.
v. எதுகை இயல்பு
எதுகையைப்பற்றிக் கூறுகின்ற இப்பகுதி எட்டு நூற்பாக்களை உடையது. இங்கு எதுகையின் சில வேறுபாடுகள் இனம் பிரித்துக் கூறப்படுகின்றன.
99.சிங்கம்என்று எழும்பாட்டு அடிதொறும் எதுகை
 தங்கம் பொங்கம்என்று அமைவது போல்வன
 சிதையாத் தொடைஎனச் செப்புவர் தெளிந்தோர்.
ஒரு பா சிங்கம் எனத் தொடங்கினால் அதன் மற்ற அடிகளின் தொடக்கம் தங்கம், பொங்கம் என்பன போன்று அமைவதைப் புலவர்கள் குறைபாடற்ற எதுகைத்தொடை என்பர் என்றவாறு.