யாப்பிலக்கணம்352
எதுகைத்தொடை என்பது அதிகாரத்தால் பெறப்பட்டது. எடுத்துக் காட்டிய உதாரணச் சொற்களால் முதல் எழுத்து அளவொத்து நிற்க இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது எதுகை என்பதும் புலனாயிற்று. இரண்டாமெழுத்து மெய்யெழுத்தாக வந்தால் மூன்றாவது எழுத்து நான்கு அடிகளிலும் ஒரே எழுத்தாக வந்தால் அப்படி அமைகின்ற தொடை சிதையாத் தொடையாகும். இதனைச் சிதையாத்தொடை எனவே சிதைந்ததொடை ஒன்றும் உண்டு என்பதாயிற்று. இது அடுத்த சூத்திரத்தில் கூறப்படும்.
(498)
100.கொற்றியும் செற்றமும் கற்றையும் போல்வன
 சிதைவுறு தொடையெனச் செப்பினர் சிறந்தோர்.
கொற்றி, செற்றம், கற்றை என்பன போன்ற சொற்கள் ஒரு பாவில் எதுகையாக வரின் அது சிதைந்த தொடையென்று அறிஞர்களால் கூறப்படும் என்றவாறு.
இரண்டாமெழுத்து மெய்யாகிய போது மூன்றாவது ஒரே எழுத்தாக வராமல் ஒரே வருக்கமாக வந்தது. (றி,ற,றை என வந்த றகர வருக்கக் குறில்கள்) இலக்கியத்தில் இவ்வாறு ஏராளமாக வரும். என்றாலும் இவ்வாசிரியர் இத்தகையன குறைபாடுள்ள எதுகைத்தொடையே என்கிறார்.
(499)
101.பார்த்திபன் காய்த்தமா அன்ன பிறவும்
 ஓசைத் தொடைஎன்று உரைத்தனர் உணர்ந்தோர்.
பார்த்திபன், காய்த்தமா போன்றவை எதுகையில் வந்தால் அதை யாப்பறிந்த புலவர்கள் ஓசைத்தொடை என்று கூறுவார்கள் என்றவாறு.
இந்நூற்பா ய,ர,லழ என்னும் நான்கு ஒற்றுகளில் ஏதானுமொன்று முதலெழுத்துக்கும் எழகையெழுத்துக்கும் இடையில் வரும் ஆசெதுகையைச் சுட்கிறது. “யரலழ இடை உறின் ஆசுஎனப் படுமே”1 என்பது இதன் இலக்கணம். இடையின மெய் பொதுவாகத் தன் இன உயிர்மெய்யுடன்