சேர்ந்தால்தான் முழுமையாக ஒலிக்கும். மற்றவற்றுடன் ஒலிக்காது. எனவேதான் ஒலி நயமறிந்த சான்றோர்கள் இந் நான்கை மட்டும் ஆசெதுகையாக ஏற்றனர். ஒலித்தன்மை பற்றி ஏற்கப்பட்டதால் இவர் ஓசைத்தொடை என்கிறார். ஓசைமாறுபாடற்ற தொடை ஓசைத்தொடையாயிற்று. (500) |
102. | பாலுக்குக் கூழுக்கு எனப்பகர் பிறவும் | | இனத்தொடை ஆகும்என்று இயம்பினர் சிலரே. |
|
பாலுக்கு, கூழுக்கு என்பனபோன்று இரண்டாவது எழுத்து ஒரே இனத்தைச் சேர்ந்ததாக வந்தால் சிலர் அதை இனஎதுகைத் தொடை என்பர் என்றவாறு. |
இனஎதுகை வல்லின எதுகை, மெல்லின எதுகை, இடையின எதுகை என மூவகைப்படும். நூற்பாவில் இடையின எதுகை காட்டப்பட்டது. (501) |
103. | சீருற்ற நீருற்ற எனமிக்கு வருவன | | அலங்கா ரத்தொடை யாமெனத் தகுமே. |
|
சீருற்ற, நீருற்ற என்பற்றைப்போல் மூதற்சீர் முழுவதும் முதலெழுத்தொழிய ஒன்றிவந்தால் அது அலங்கார எதுகை என்று பெயர்பெறத் தகும் என்றவாறு. |
பாவின் ஒலி ஒப்பனை செய்யப்பட்டதைப் போன்று கம்பீரமாக விளங்குதலின் அலங்கார எதுகை எனப்பட்டது. (502) |
104. | ஆடும் பரிவேலணி பாடும் பணியேபணி | | எனவரல் யாவும் வண்ண எதுகையே. |
|
ஆடும்பரிவேல் அணி, பாடும்பணியே பணி என்பன போல் சந்த ஒசையுடன் வரும் எதுகைகள் வண்ணஎதுகைகளாம் என்றவாறு. |
இவ்வெதுகை “தானந் தனனாதன” என்ற சந்தத்தில் வந்தது. |