இச் சூத்திரத்துடன் எதுகை இயல்பு முற்றுவிக்கப்பட்டு அடுத்த நாற்கலி இயல்பிற்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்பட்டது. (505) |
ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நான்கு விதமான கவிகள் பற்றியும், குளகச் செய்யுள், முத்தகச்செய்யுள் என்பனவற்றின் வேறுபாடும், பாடலில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் இன்னவை என்பதும், தன்மை முதலிய மூவிடங்கள் பற்றியும் இவ்வியல்பில் கூறப்படும். மொத்தம் ஏழு நூற்பாக்களை உடைய இவ்வியல்பில் ஐந்து நூற்பாக்கள் நாற்கவியியல்பைக் கூறுவதால் இப்பகுதி பன்மை பற்றிப்பெயர் பெற்றது.e |
107. | பட்டினத் தடிகள் ஆதிய பாவலர் | | கழுமரம் எரிவுறக் கழறிய தாதிய | | ஆசு கவியினம் ஆம்எனத் தகுமே. |
|
பட்டினத்தார் தன்னை ஏற்ற இருந்த தூக்குமரம் தீப்பற்றும்படி பாடிய பாடலைப்போல் அவ்வப்போது உடனடியாகப் பாடப்படும் பாடல்கள் ஆசுகவி எனப்படும் என்றவாறு. |
“எழுத்துச் சொற்பொருள் அணியாப்பு இவையின் விழுத்தக ஒருவன் விளம்பிய உள்ளுறை அப்பொழுது உரைப்பது அசுகவியே”1 என்பது இலக்கணவிளக்கம். நாகப்பட்டினத்தில் பட்டினத்தடிகள் மீது ஆலயப் பொற்பாத்திரத்தைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கழுவேற்ற முயன்றபோது “என் செயலாவது” என்ற கவியைக் கூறக் கழுமரம் தீப்பற்றி எரிந்தது என்பர். (புலவர் புராணம்-திருவெண்காடர் சருக்கம்-60-63) இப்பா உடனடியாகப் பாடப்பட்டதாதலின் ஆசகுவி ஆயிற்று. (506) |
108. | குளிர்பொழிற் பாண்டிக் குலசே கரன்பகர் | | அம்பிகை மாலை ஆதிய மதுரமே. |
|
|