யாப்பிலக்கணம்358
என்று இன்னன புனைந்த நன்னடைத் தாகி மந்திரந் தூது செலவு இகல் வென்றி சந்தியிற் றொடர்ந்த”1 பொருள்களோடு அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகைப் பொருள்களை. அணியாசிரியர்கள் பெருங்காப்பியத்தில் மது உண்டு களித்தலை விரித்துப் பாடவேண்டும் எனக் கூறியிருப்பினும் இவ்வாசிரியர் அதனை ஏற்கவில்லை. கற்பவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் செய்திகளே நூலில் இடம்பெற வேண்டும் என்பது இவர் கருத்து. இவர் புலவர் புராணத்தில் பரஞ்சோதியாரைப் பற்றிக் குறிப்பிடும் போது “வேம்பத்தூர்ப் பனவர் மதுரையூர்ச் சிவன்செய் வியன்விளையாடல்கள் அனைத்தும் தேம்பட்ட கவியாற் சொற்றபின் பரஞ்சோதிமுனியாஞ் சைவதே சிகன்றான் தாம்பற்று றெநியால் விரித்துஅதில் கம்பன் றனைநம்பிக் கள்ளுண்டாட்டு உரைத்தது ஆம்பட்சம் அன்று என்று அருவருக்கின்றறோர் அகிலமீது ஒரு சிலர் உளரே”2 எனக் கூறுவதால் இது தெளிவாகிறது.
அகவல், கலிவெண்பா என்றது மதுரைக்காஞ்சி, பெருங்கதை, கந்தர்கலி வெண்பா போன்ற நீண்ட பாடல்களை. இயற்றப்படுகின்ற அகவல், கலிவெண்பாக்கள் அனைத்தும் வித்தாரகவி ஆகிவிடா. அளவாலும் பாடுபொருளாலும் பெரியனவாக இருப்பனவே வித்தாரகவியாம்.
(509)
அகவல், கலிவெண்பா என்றது மதுரைக்காஞ்சி, பெருங்கதை, கந்தர்கலி வெண்பா போன்ற நீண்ட பாடல்களை. இயற்றப்படுகின்ற அகவல், கலிவெண்பாக்கள் அனைத்தும் வித்தாரகவி ஆகிவிடா. அளவாலும் பாடுபொருளாலும் பெரியனவாக இருப்பனவே வித்தாரகவியாம்.
(509)
111.ஆசு கவியின் அமைதியும், மதுர
 கவியின் கனிவும் கரட்டு முரட்டுச்
 சித்திர கவியின் திரிவும் மாறாட்டமும்
 வித்தா ரக்கவி விளக்கமும் புலவோர்
 சேர்க்கையில் தேறிடில் அன்றித் தெரியா;
 ஆயினும் இயலிசை அறிவான் அவ்வயின்
 இருநூல் எம்மதுஎன்று எடுத்துக் காட்டலும்
 முதல்நூல் இதுஇதுஎன மொழிவதும் தகுமே.
ஆசுகவிகளின் ஆரவாரமற்ற போக்கையும், மதுரகவியின் இனிமையயும், கரடுமுரடாக அமைக்கப்படும் சித்திரகவியில்