தகைய நுட்பங்கள் மெய்யறிஞர் கூட்டுறவினால்தான் பெற முடியுமாதலின் அவ்வாறு கூறினார். | இந்நூலாசிரியர் எடுத்துக்காட்டுகளைப் பற்றிய ஒரு புதிய கொள்கையை இந்நூற்பாவில் உரைத்திருக்கிறார். நூலாசிரியர் தன்னுடைய படைப்புகளையே எடுத்துக்காட்டாகக் காட்டுவதாயின் குறைந்தது இரண்டினைக் காட்ட வேண்டுமென்றும், முன்னோர் நூல்களைக் காட்டினால் ஒன்றே போதுமென்பதுவும் அக்கொள்கையாகும். இது இவராலும் இந்நூலில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நூல் 446 ஆம் சூத்திரத்தில் சகத்திர தீபம், வருடப்பதிகம் என இரு நூல்களையும் 482 ஆம் நூற்பாவில் மூன்று வண்ணங்களையும் தம் படைப்பாக எடுத்துக் காட்டுகிறார். இதே இயல்பில் ஆசு முதலியனவற்றிற்கு முன்னோர் மொழியாக ஒவ்வொன்றே காட்டுகிறார். (நூற்பா 506 முதல் 508 வரை) (510) | 112. | உரைப்பொருள் மிகலால் ஒன்றோடொன்று அணைவுறு | | தொந்தக் கவிகளைக் குளகம் என்றும், | | பொருள்எழும் இடம்தனை எழுவாய் என்றும், | | முற்றுறும் இடம்தனைப் பயனிலை என்றும், | | குறித்ததைச் செயப்படு பொருளாம் என்றும், | | தன்செயல் கூறிடல் தன்மை என்றும், | | வினவக் கூறிடல் முன்னிலை என்றும், | | பிறநிலை பேசுதல் படர்க்கை என்றும், | | அறைவன ஆதிய அறிவது கடனே. |
| கூறவேண்டிய செய்தி முற்றுப்பெறாததால் ஒன்றோடொன்று ஒரே வாக்கியமாகத் தொடர்ந்து செல்கின்ற பாக்கள் குளகம் எனப்படும். ஒரு பாடலில் வினைமுதலாக இருக்கும் சொல் (பொருள் எழும் இடம்) எழுவாய் எனப்படும். செய்யப்பட்ட செயலை முடித்துக் கூறும் சொல் பயனிலை எனப்படும். எது செய்யப்பட்டதோ அதனைக் குறிக்கும் சொல் செயப்படுபொருளாம். ஒருவர் தன் செய்கையைத் தானே கூறினால் அது தன்மை எனப்படும். எதிரில் உள்ளவரை நோக்கிச் சொல்வதற்கு முன்னிலை எனப் பெயர். இவ்விரண்டுமல் |
|
|