அறுவகையிலக்கணம்361
லாத மற்றவற்றைக் குறித்தவை படர்க்கை எனப்படும். இவ்வாறு இலக்கணிகளால் கூறப்படுவனவற்றை எல்லாம் மாணவர் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்றவாறு.
தொந்தக் கவிகளைக் குளகம் என்றதனால் ஒரே பாடலில் பொருள் முற்றுப்பெற்றால் அது முத்தகம் எனப்படும் என உரையிற் கோடலாகப் பெற்றாம். “முத்தகச் செய்யுள் தனி நின்று முடியும்”, “குளகம் பலபாட்டு ஒரு வினை கொள்ளும்”1 என்பன இவற்றின் இலக்கணம். எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய வாக்கியஉறுப்புகளும், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களும் இந்நூற்பாவில் கூறப்பட்டன. சொல் இலக்கணத்தில் இவை கூறப்படாததால் இங்கு இடம் பெற்றன. ஒரு பாடலின் பொருள் முடிபு காண இவை இன்றியமையாதனவாதலின் இவை யாப்பியலில் வைக்கப்பட்டன.
(511)
113.பாசுரத்து இயல்புஇவண் பகர்ந்தமட்டு அடக்கிப்
 பனுவல் இயல்பினைப் பகருதும் சிறிதே.
பாக்களைப் பற்றிக் கூறும் நாற்கவி இயல்பை இவ்வளவோடு முடித்து அடுத்து பனுவல் இயல்பைக் கொஞ்சம் கூறத் தொடங்குவாம் என்றவாறு.
இந்நூற்பாவால் இவ்வியல்பு நிறைவு செய்யப்பட்டு அடுத்ததாகிய பனுவலியல்பிற்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்படுகிறது.
(512)
VII. பனுவல் இயல்பு
இவ்வியல்பில், நூல், பிரபந்தம், புராணம், காவியம் ஆகிய பகுப்புகளும், பாயிரத்தின் இன்றியமையாமையும் நூல்வகைகளின் பாடுபொருளும், நூலின் உட்பிரிவுகளும், சிற்றிலக்கிய வகைகளும், இவற்றோடு தொடர்புடைய வேறு சில செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இதில் 21 நூற்பாக்கள் உள்ளன.
114.சொற்கடல் அமிழ்துஎனத் துலங்கும் தூய
 பனுவல் இயல்பினைப் பகுக்கில்நூல் என்றும்,