| பிரபந்தம் என்றும் பேசும் இருபாற்று; | | ஆணொடு பெண்போன்று அவிர்தரும்; அலிஎனக் | | கந்தும் சிற்சில கவின்தரும்; அவற்றைப் | | புராணம், காவியம் என்பார் புலவோர். |
| சொற்களாகியபாற்கடலிலிருந்து வெளிப்படும் அமுதத்தைப் போன்று விளங்கும் தூய்மைமிக்க பனுவல்களை இலக்கண ரீதியாகப் பிரித்தால் அவை நூல், பிரபந்தம் என இரு வகைப்படும். இவற்றுள் நூல் ஆண்தன்மைகளைப் பெற்றும், பிரபந்தம் பெண்தன்மைகளுடனும் இருக்கும். இவ்விரு தன்மைகளும் கலந்து பேடியைப் போன்றும் சில பனுவல்கள் அமையும். புலவர்கள் அத்தகையவற்றைப் புராணம், காவியம் என்பர் என்றவாறு. | சொற்களின் கூட்டத்தாலேயே நூல்கள் தோன்றுதலின் சொற்கடல் அமிழ்து என்றார். ஆசிரியரின் அறிவாற்றலை மத்தாகக்கொள்க. அறியப்பட வேண்டிய செய்திகளைக் கூறும் இலக்கணம், தத்துவம் போன்ற பயன்பாட்டுப் பனுவல்கள் நூல் என்றும், இலக்கியச்சுவையையே தலைமையாக உடைய எழிற் கவிதைகள் பிரபந்தம் என்றும் இவரால் பின்னால் விளக்கப்படுகிறது. அறிவுத் தன்மை ஆடவர்க்கும், எழிலும் கலைச் சிறப்பும் மகளிர்க்கும் மிக்க சிறப்புடையதாதலின் அது பற்றி ஆண் பெண் என்றார். காவியம், புராணம் போன்றனவற்றில் சில இடங்களில் தத்துவம், நீதி, அரசியல் போன்ற பயன்தரு செய்திகளும், வேறு சில இடங்களில் இலக்கியச்சுவை கருதி இயற்றப்படும் பகுதிகளும் கலந்து இடம் பெறுவதால் அவற்றை அலித்தன்மை வாய்ந்தவை என்றார். ஆடூஉத்தன்மை, மகடூஉத்தன்மை இரண்டும் இல்லாததாகிய அலித்தன்மையிலிருந்து, இரண்டும் சேர்ந்துள்ள காவிய இயல்பைப் பிரித்துக் காட்டவே ‘அலிஎனக் கலந்தும்’ என்று விளக்கினார். (513) | 115. | நூல்பிர பந்தம் காவியம் எனநுவல் | | மூவகைப் பனுவற் பிரிவை நோக்கில் | | மனுத்திரள் போன்றே வயங்கும் ஆதலின் | | பெயர்குணம் முழுமையும் பேசரிது; ஆயினும் | | ஒருவாறு இந்நூல் பொருட்டுஉரைக் குதுமே. |
|
|
|