யாப்பிலக்கணம்364
அறம், பொருள், இன்பம், வீடடைதற்குரிய வழியைக் காட்டுதல் ஆகிய நான்கும் அனைத்துவகைப் பனுவல்கட்கும் தாய், தந்தை, ஆசான், தெய்வம் என்னும் நான்கினைப் போல உறுதிச் சுற்றமாகும் என்று சற்றும் ஐயத்திற்கிடமின்றித் தெளிதல் நீதிநெறியினில் நிற்பவர்களுக்குச் சிறப்பாம் என்றவாறு.
காக்கும் தன்மையால் அறம் தாயுடனும், செல்வப்பொருள் சேமித்துக் கொடுக்குந் தன்மையால் பொருள் தந்தையுடனும், இறைவனைக் கூடிப் பேரின்பம் நுகரத் துணையாந் தன்மையால் இன்பம் குருவுடனும், இம்மூன்றிலும் கூடியும் பிரிந்தும் உள்ள தன்மையால் வீட்டின்நெறி தெய்வத்துடனும் உவமிக்கப்பட்டது. இது நூல் முதலிய மூவகைக்கும் பொது. “அறம், பொருள், இன்பம், வீடு அடைதல்நூற் பயனே”1 ஆதலின் இவ்வாறு கூறப்பட்டது. “வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாதலின், துறவறம் ஆகிய காரண வகையான் கூறப்படுவதல்லது இலக்கணவகையான் கூறப்படாமையின்”2 வீடு என்னாது வீட்டுநெறி என்றார்.
(515)
117.இலக்கணம், இலக்கியம், சோதிடம், நீதி
 வயித்தியம், சிற்பம் ஆதிய வகுக்கும்
 பனுவல் யாவும் நூல்எனப் படுபவே.
இலக்கணம், இலக்கியம், சோதிடம், நீதி, மருத்துவம், சிற்பம் போன்றனவற்றைத் தெரிவிக்கும் அறிவு நூல்கள் அனைத்தும் நூல் எனப்படும் என்றவாறு.
நூல் என்றது அறிவிற்குப் பயன்தரும் சாத்திரங்களை.
118.தெய்வம், அரையன், செழும்பொன் கொடுப்போன்,
 சுவைதெரிந்து உவப்போன் ஆதியர்த் துதித்த
 பனுவல்கள் யாவும் பிரபந்தம் ஆமே.
கடவுள், மன்னன், பொருள் அளித்துப் புரக்கும் வள்ளல், இலக்கியச் சுவையை ரசித்து அனுபவிக்க வல்லவன்