யாப்பிலக்கணம்368
கடவுள் வாழ்த்தும், நூற்பெயரும் மட்டுமாவது நூலின்கண் இடம் பெறுவதே சிறப்பாகும் என்றவாறு.
நூலின்கண் உண்மையாகவே சிறப்பு இருந்து அது பாயிரத்தில் எடுத்துக் கூறப்பட்டால் அதுதான் உயர்வாகும். உயர்வும் தாழ்வும் நூலின்கண் உள்ளதேயன்றி வெறும் பாயிரத்தால் அதுவந்து விடாதென்கிறார். இது “ஆயிரமுகத்தான் அகன்றது ஆயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே”1 என்ற கருத்தை ஓரளவு மறுத்ததாகவும் கொள்ளலாம். நூல் நிலைத்துப் பயன்தரக் கடவுள் வாழ்த்தும், நூலின் தன்மை விளங்க அதன் பெயரும் இன்றியமையாதனவாதலின் அவற்றையாவது கூறலே அழகு எனப்பட்டது.
(523)
125.கொலைபுலை மறுத்திடல் நூற்கும், கொற்றம்
 பெருங்கொடை எனும்இவை பிரபந்தத் தினுக்கும்,
 கடவுளும் தொண்டரும் காவியத் தினுக்கும்
 உரியமெய்ப் பொருள்என உரைத்தனர் உணர்ந்தோர்.
உயிர்க்கொலையையும், புலாலுண்டலையும் தவறென விளக்குதல் அறிவுப் பனுவலாகிய நூல்களுக்கும், வெற்றி, பெருவள்ளன்மை ஆகிய இரண்டின் சிறப்பும் பாட்டுடைத் தலைவனைப் போற்றும் பனுவலாகிய பிரபந்தத்திற்கும், இறைவன், அடியவர் ஆகியோர் வரலாறு முதலியன காவியத்திற்கும் பாடுபொருளாக அமைவதற்கு உரிமைபெற்ற பொருள்கள் ஆம் என அறிஞர்கள் கூறுவர் என்றவாறு.
“அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தன்நோய் போல் போற்றாக்கடை”2 என்பது தமிழ்மறையாதலின் அறிவுப் பனுவல்கள் எப்பெற்றியதாயினும் கொலைபுலையை மறுக்க வேண்டும் என்றார். இந்நூற்பாவில் இடம் பெற்ற வெற்றி தொழில் வெற்றி, போர் வெற்றி இரண்டையும் குறிக்கும். இவ்வெற்றி செல்வ ஆக்கத்திற்கும், வள்ளன்மை புகழுக்கும் காரண