மாதலின் இவை பிரபந்தத்தின் பாடுபொருளாயின. காவியத்தில் கடவுள், அடியார் வரலாறு விரிவாக இடம்பெறும். (524) |
126. | நூல்களின் பகுதிகட்கு அதிகாரம் என்றும் | | இயல்புஎன்றும் உருவகம் என்றும் பின்னும் | | இசைந்தவா றும்பெயர் இட்டனர் புலவோர். |
|
அறிவியல் நூல்களின் உட்பிரிவுகளுக்கு அதிகாரம், இயல்பு, உருவகம் எனவும், மேலும் அந்தந்த நூலுக்குப் பொருத்தமாகவும் பெயர் சூட்டினர் என்றவாறு. |
அதிகாரம் எனப் பெயர் பெற்றவை தொல்காப்யிம், வீரசோழியம் முதலியன. திருக்குறளின் அதிகாரப் பகுப்பும் இங்கே கொள்ளத்தகும். இயல்பு எனப் பெயர் பெற்றது இந்நூல். உருவகம் எனப்பெயர் பெற்றது சிறப்புநூல். |
வேறுபெயர் பெற்ற நூல்கள்:- நன்னூல், தண்டியலங்காரம்-இயல்; பிரயோக விவேகம், கைவல்ய நவநீதம் - படலம்; திருவருட்பயன்-நிலை; சிவப்பிரகாச விகாசம் - மரபு. வேறும் வந்துழிக்காண்க. (525) |
127. | தசாங்கம், பவனி, தூதுஇவை முதலாப் | | பிரபந் தப்பொருள் பிரிவுபல் விதமே. |
|
பிரபந்தப் பனுவல்கள் தம் பாடுபொருளால் தசாங்கம், உலா, தூது முதலியனவாகப் பல்வேறு வகைப்படும் என்றவாறு. (526) |
128. | காண்டம் சருக்கம் படலம் கதிமுதல் | | காவியப் பகுதியும் கணக்கரும் பாற்றே. |
|
காவியப் பனுவல்களும் காண்டம், சருக்கம், படலம், கதி முதலிய பல்வேறு பெயர்களிலமைந்த உட்பிரிவுகளைக் கொண்டிருக்கும் என்றவாறு. |
காண்டம், படலம் இரண்டும் கம்பராமாயணத்தில்; சருக்கம், புராணம் இரண்டும் பெரிய புராணத்தில்; பருவம், சருக்கம் இரண்டும் வில்லி பாரதத்தில்; கதி பிரபுலிங்கலீலையில். |