எமதருமன், இந்திரன், வள்ளி நாயகி, அரக்கர்கள் ஆகியவர்களுக்கு உவமைகளாகக் கூறுதல் மரபாம் என்றவாறு. |
இலக்கியத்தில் கருமை, நீலம், பசுமை ஆகிய மூன்றும் பெரும்பாலும் ஒன்றாகவே கொள்ளப்படும். கம்பநாடன் ஒரே அடியில், “மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ”1 என இம்மூன்று வண்ணங்களையும் ஒன்றாகக் கூறுவான். எனவே இம் மூன்று வண்ணப் பொருள்களும் இந் நூற்பாவில் கூறப்பட்ட அவுணரொழிந்த மற்றவர்களுக்கு உவமையாக வரும். அவுணர்களுக்குக் கரியநிறம் மட்டுமே கூறப்படும். (537) |
5. | பொன்நிறம் பிரமன் பூமகள் குஞ்சரி | | என்னும் மூவர்க்கு இயல்பாம் அன்றே. |
|
பிரமன், திருமகள், தெய்வயானை ஆகிய மூவர்க்கும் பொன்வண்ணம் இயற்கையாம் என்றவாறு. (538) |
6. | அன்னம் கலைமகள் அணிகாட் டுதல்போல் | | மஞ்ஞையும் கிளியும் மலைமகள் மறமகள் | | போலும்என்று உரைப்பது புலவோர்க்கு இயல்பே. |
|
அன்னப்பறவை வாணியின் எழிலுக்கு உவமையாதல்போல் மயில் உமாதேவியாருக்கும், கிளி வள்ளிநாயகிக்கும் இணையாகும் என்பது கவிஞர் மரபு என்றவாறு. (539) |
7. | அரன்குகன் திருமால் என்னும் மூவர் | | வெளிறலும், கணபதி கருநிறம் மேவலும், | | மாதளம் பூஎன மலைமகள் சிவத்தலும் | | உண்டுஎனச் சிற்சிலர் உரைத்தனர் உணர்ந்தே. |
|
சிவபெருமான், முருகக்கடவுள், நாராயணமூர்த்தி என்னும் மூவருக்கும் (முறையே செம்மை, செம்மை, நீலம் ஆகிய நிறமே அன்றி) வெண்மை நிறம் உடைமையையும், விநாயகர் (செம்மை நிறத்தோடு) கருநிறம் பெற்று விளங்குதலையும் |
|