அறுவகையிலக்கணம்381
குடிகொண்ட நீல மேனியும்1 என்று கூறியுள்ளார்.
உமாதேவியைச் சிவபெருமானின் மனைவி என்ற புராண வழியில் அல்லாமல் முதற்பரம்பொருளாக வழிபடும் சாக்தர்கள் சக்தியைச் செந்நிறமாகவே கொள்வர். அபிராமி பட்டர் தேவியின் நிறத்தை, “உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமதோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே”2 எனவே குறிப்பிடுகிறார். சாக்தேயர்கள் மிகப் போற்றும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமமும், சிந்தூராருணவிக்ரஹாம்3 என்றும், தாடிமீ குசுமப் பிரபா4 என்றும் கூறுகிறது.
இறைவனின் ஒரு வடிவத்தை உபாசித்து அவ்வடிவத்தைத் தம் மனவெளியிலே கண்டவர்களாலேயே இந்த வடிவ வர்ணனைகள் கூறப்பட்டுள்ளன. ஆதலின் இவை வெறும் கற்பனைகள் அல்ல என்னும் தம் கொள்கையை வற்புறுத்தச் சிற்சிலர் உரைத்தனர் உணர்ந்தே என்றார்.
(540)
8.வெள்ளி மால்வரை விடைஅயி ராவணம்
 பொன்னூர் வேழம் குகன்கொடி அயன்பரி
 ஆதிக்கு இணைஎன்று அறையத் தகுமே.
சிவபெருமானுடைய ஊர்தியாகிய இடபம், அயிராவணம் எனும் யானை, தேவருலகத்தின் அரசனாகிய இந்திரனின் வாகனமாகிய அயிராவதம் என்னும் களிறு, முருகப்பெருமானின் கொடியாகிய சேவல், பிரமன் ஊர்கின்ற அன்னப் பறவை முதலியனவற்றிற்கு வெண்மையான பெரிய மலையாகிய கயிலாயத்தை உவமையாகக் கூறலாம் என்றவாறு.
(541)
9.வேலொடு மின்னலை ஆழியோடு இரவியைச்
 சங்கொடு மதியைச் சாற்றுதல் இயல்பே.