முருகப்பெருமானின் வேலாயுதத்திற்கு மின்னற்கீற்றையும், திருமாலின் சக்கரத்திற்குச் சூரியனையும், சங்கிற்குச் சந்திரனையும் உவமையாகக் கூறுதல் மரபாகும் என்றவாறு. (542) |
10. | மயிலினை மரகதம் என்கை ஆதிய | | தெய்வச் சின்னத்து உவமைச் சிறப்புஎலாம் | | தொண்டர்தம் மொழிவழி சொல்வது முறையே. |
|
முருகப்பெருமானின் ஊர்தியாகிய மயிலை மரகதம் என்று உவமித்துக் கூறுதல் போன்ற கடவுளர்களின் அடையாளங்களுக்குரிய உவமை நலன்களையெல்லாம் அடியார்களின் வாக்கிற்கொப்பவே சொல்லுதல் மரபாகும் என்றவாறு. |
புனிதமானவையெனக் கருதப்படுவனவற்றிற்குக் கவிஞன் தன் மனம் போல உவமை கூறக்கூடாது. மலைமகளைக் கரிய நிறத்தாள் எனக்கூற எருமை போன்ற நிறத்தினள் என்னலாகாது. இது பற்றியே தொல்காப்பியரும் “உவமைப் பொருளை உணருங் காலை மரீஇய மரபின் வழக்கொடு வருமே”,1 என்றார். இவர் அடியார்கள் தெய்வீகச் சின்னங்களை எப்படிக் கூறியுள்ளனரோ அவ்வாறே கூறுக என்கிறார். (543) |
11. | வசிட்டனை அகத்திய மாமுனி ஆதியர் | | தம்மைத் தவத்தோர்க்கு இணைசொலில் தகுமே. |
|
வசிஷ்டர், அகத்தியர் போன்ற சிறந்த முனிவர்கள் தவசிகளோடு உவமிக்கத் தக்கவர்கள் என்றவாறு. (544) |
12. | உம்பர்ஊர்க் குரவன், நான்முகன் ஆதியர் | | அந்தணர் புகழ்ச்சிக்கு அணிகலம் ஆவரே. |
|
அமரர் உலகத்தின் ஆசானாகிய வியாழன், பிரமன் போன்றோர் வேதியர்களின் சிறப்பைக் கூறுங்கால் உவமிக்கத்தக்கவர்கள் என்றவாறு. (545) |
|