அறுவகையிலக்கணம்383
13.இராகவன் தருமன் முதலினர் தம்மை
 நீதிமன் னவர்க்கு நிகர்சொலல் இயல்பே.
இராமபிரான், தருமபுத்திரர் போன்றவர்களைச் செங்கோல் வழுவாமல் ஆட்சிசெய்யும் அரசர்களுக்கு ஒப்பாகக் கூறலாம் என்றவாறு.
(546)
14.வீமன் வென்றிவில் விசயன் ஆதியரை
 வீரருக்கு உவமை விளம்பிடல் இனிதே.
வீமன், காண்டீபத்தை உடைய அருச்சுனன் போன்றவர்கள் வீரர்களுடன் இணையாக்கத் தக்கவர்கள் என்றவாறு.
15.வணிகர்க்கு அளகைக் காவலன் தன்னை
 உவமை கூறிடல் உத்தமம் ஆமே.
பெரிய வியாபாரிகளுக்கு அளகாபுரியின் வேந்தனாகிய குபேரனை ஒப்பிட்டுக்கூறுதல் சிறப்பாம் என்றவாறு.
(548)
16.முளைகொணர்ந்து அடிசில் இட்டோன் மூர்த்தி
 சடையன் ஆதியர் சதுர்த்தர்க்கு உவமையே.
வித்திய முளைவாரி இரவில் விருந்து படைத்த இளையான் குடி மாற நாயனார், மூர்த்தி நாயனார், திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் போன்றவர்களை வேளாளர்களுக்கு உவமை கூறுதல் மரபாம் என்றவாறு.
வணிகர் குலத்தே தோன்றி மும்மையால் உலகாண்ட மூர்த்தி நாயனாரை வேளாளர்களுக்கு உவமையாகக் கூறுவதன் காரணம் விளங்கவில்லை.
(549)
17.மிடிஅறக் கொடுக்கும் வீறுஉடை ஒருவனைக்
 கன்னன்ஆ தியர்க்குஇணை கழறலும், அன்றி
 அரன், அரி குகவேள் அனையான் எனினும்
 முத்தமிழ்ப் புலவோர் முனியார் அன்றே.