அணியிலக்கணம்384
இரவலரின் வறுமை முற்றிலும் அழியும்படியாகப் பெரு நிதியம் வழங்கும் வள்ளல் ஒருவனைத் துரியோதனின் நண்பனாகிய கன்னனுக்கு நிகராகக் கூறுவதுடன் அவனைச் சிவபெருமான், திருமால், முருகப்பெருமான் ஆகியோரை ஒத்தவன் என்று கூறினாலும் தமிழ் மரபு அறிந்த நாவலர்கள் தள்ளமாட்டார்கள் என்றவாறு.
மிடி அறக்கொடுத்தல் பேரருள் ஆதலின் அத்தன்மை உடையானைக் கடவுளுடன் ஒப்பிட்டுக் கூறினாலும் தவறு இல்லை என்பது கருத்து. இதையே, “புகழ்வேண்டிச் சிறிதே பொருள் கொடுப்பவர்களை மகிழ்விக்க அவர்களைத் தெய்வமாகக் கூறிப் போற்ற வேண்டாம்” என விலக்குவதாகவும் கொள்க.
(550)
18.கார்மணல் ஓட்டமும், பாசிக் கொத்தும்,
 மேகமும் இருளும் விரிமலர்ச் சோலையும்,
 வண்டுக் கூட்டமும், மற்றோர் விதப்பனை
 காய்த்துள கொத்தும் கருங்குழற்கு இணை; அது
 பின்னுறில் கொன்றைக் காய்எனப் பிறங்கும்;
 அவிழ்ப்புறில் அகத்திக் காய்க்கொத்து அனையதாம்;
 இன்னமும் பலவாறு இயம்புவர் புலவோர்.
ஆற்றோரத்தே படிந்துள்ள கருமணலும், கடற்பாசிக்கூட்டமும், முகிலும், இருட்டும், மலர்கள் நிறைந்த காவும், வண்டின் ஒழுங்கும், கூந்தற் பனங்காய்க் கொத்தும் மகளிரின் கரிய கூந்தலுக்கு உவமையாகும். அக்கூந்தல் சடையாகப் பின்னப் பட்டால் கொன்றைக்காயைப்போல் தோற்றமளிக்கும். அப்பின்னல் அவிழ்த்து விடப்படின் அகத்திக்காய்க்கொத்துப் போன்றிருக்கும். இவைகளே அன்றி வேறு உவமைகளையும் கவிஞர் மகளிரின் கூந்தலுக்கு நிகராகக் கூறுவர் என்றவாறு.
இந்நூல் பொருள் இலக்கணம் உறுப்பியல்பில் மகளிரின் அங்கங்களின் இயற்கைப் பண்பும் செயற்கைப் புனைவுகளும் கூறப்பட்டன. அங்கும் சில உவமைகள் பெறப்பட்டன. இங்குத் தனியாக உவமைகளையே கூறுகிறார். கார்மணல் ஓட்டம் என்றது ஆற்றலை.