அறுவகையிலக்கணம்385
“கொன்றைக் கனி,கல் லார்மனமும்,
 கூந்தற் கமுகும் பொதுமாது
 தன்றன் இதயம் சூல்மேகம்
 சவரி கருமை யடர்கங்குல்
 மன்றல் கமழும் அஞ்சனிப்பூ,
 வயங்குஞ் சிறைவண் டினம் சோலை,
 துன்றல் வரும்பைம் புனல்கொழிக்கும்
 தூய அறல், இந்திரநீலம்”
 “இருள்சை வலம்ஆம் மூவைந்தும்
 ...தகரக் குழலுக்கு இணையாமே.”1
என்பது இங்கு ஒப்பிடத்தக்கது.
இவ்வுவமைஇயல்பில் மகளிரின் உறுப்புகளுக்கு மட்டுமன்றி ஆடவர்களின் அங்கங்களுக்கும் உவமை கூறப்படுகிறது.
19.நெடுமால் அனையான் நெற்றி நிமிர்பிறை
 செந்திரு அன்னாள் சிறுநுதல் ஏனையே.
திருமாலைப் போன்று சிறந்து விளங்குகின்ற ஆண்மகனின் நுதல் நேராகஉள்ள பிறைச்சந்திரன்போல் விளங்கும். எழிலிற் சிறந்து திருமகளை நிகர்த்த பெண்ணின் நெற்றி வடிவில் சிறுத்தும், வளைந்த பிறைமதியைப் போன்றும் தோன்றும் என்றவாறு.
இதனாலேயே ஆடவரிற் சிறந்தாருக்குத் திருமாலும், பெண்களிற் பெருமையுடையார்க்குத் திருவும் உவமை ஆவர் என்பதும் பெறப்பட்டது. இதில்நிமிர்பிறை என்பது இல்பொருளுவமையின் பாற்படும். மகளிர்க்குச் சிறுநுதல் என்றதால் அருத்தாபத்தியாக ஆடவர்க்கு அகன்ற நெற்றியே சிறப்பு என்பதுவும் பெறப்பட்டது.
(552)
20.விற்பொரு புருவமும், விதுவொடு கமலமும்
 அன்னமா முகமும் அவன்அவள் பொதுவே.