அறுவகையிலக்கணம்387
கொடியைப் போன்ற மங்கையின் மூக்கினுடைய நல்ல அழகிற்கு நிகர்த்ததாகச் சில புலவர் சண்பக மலரையும் கூறுவர் என்றவாறு.
மலரையும் என்றதிலுள்ள உம்மை இந்நூல் 287ஆம் நூற்பாவில் கூறப்பட்ட எட்பூவைத் தழுவியது.
(556)
24.கன்னிதன் கவுட்குஇணை ஆடியும், காதிற்கு
 ஊசல்கத் திரிக்கோல் வள்ளைக் கொடியும்
 கூறுநர் பற்பலர் குவலயத்து உளரே.
மங்கையரின் கன்னத்திற்குக் கண்ணாடியையும், செவிகளுக்கு ஊசல், கத்திரி, வள்ளைக்கொடி ஆகியனவற்றையும் உவமையாகக் கூறும் பாவலர் பற்பலர் என்றவாறு.
வள்ளைக்கொடியும் என்பதிலுள்ள உம்மையை ஊசல் கத்தரிக்கோல் ஆகிய இரண்டுடனும் கூட்டுக. இம் மூன்று உவமைகளையே இரத்தினச் சுருக்கம், “தழைகாது கத்தரிகை பொற்புவள்ளை ஊசல் புகல்”1 "எனக் கூறுகிறது.
(557)
25.கொவ்வையில் வீழியில் குலவுசெங் கனிகளும்
 பவளமும் இதழ்க்குஇணை பகர்ந்தனர் பாவலர்.
கொவ்வைப்பழம், விழுதிக்கனி, பவளம் ஆகியனவற்றை உதடுகளுக்கு உவமையாகக் கூறுவார்கள் என்றவாறு.
இந்நூற்பா ஆடவர், மகளிர் எனப் பிரித்துக் கூறாததால் இருவருக்கும் பொதுவாகக் கொள்க. ஆடவர்களின் இதழ்களுக்கும், “திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ”2 “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்”3" என இவை உவமை ஆனமை காண்க.
(558)
26.முருந்தும் மாதளை அரிசியும் முல்லை
 அரும்பும் நகைக்குஇணை ஆவது முறையே.