அறுவகையிலக்கணம்389
“வல்லுச் சக்ர வாகம்மதன்
 மகுடம் எலுமிச் சங்கனிபூண்
 வில்வக் கனிமாங் கனிதேங்காய்
 விளவின் கனிகோ புரத்தூபி
 சொல்வெற்பு இளநீர் கதலிப்பூச்
 சொர்ணத் தாளஞ் சிவலிங்கம்
 தெல்லுக் கரகம் கோங்கரும்பு
 சிமிழ்பம் பரம்பொற் குடம்கிண்ணம்”
“செண்டு குமிழ்வார் கூடாரம்
 சேவின் சிமிழ்பொற் கரண்டகம்மென்
 புண்ட ரீகம் முகிழ்பந்து
 புன்னைக் காய்மா துளங்கனி மேற்
 கொண்ட மொக்குள் பிடிசெம்பு
 கொட்டைப் பாக்குப் பரிதிமதி
 மிண்டும் இபமத் தகம்மருப்பு
 மெழுகின் உருண்டை பசும்பொற்றேர்
 “படர்ந்த செப்பு மாவிலிங்கம்
 பழம்ஆறு ஏழும்”1"
எனக் கூறப்பெற்றனவற்றை.
(563)
31.எறும்புஒழுக்கு இருப்புச் சலாகை போலும்
 உரோமத்து அணிஉறும்; உந்திநீர்ச் சுழி; ஆல்
 இலைவயிறு என்றிடல் ஏந்திழைக்கு இசைவே.
எறும்புகள் ஊர்ந்து செல்லும் வரிசையையும், இரும்புச் சங்கிலியையும் மகளிரின் உதரத்தில் உள்ள மயிரொழுங்கிற்கும், நீர்ச்சுழியைக் கொப்பூழிற்கும், ஆலிலையை வயிற்றிற்கும் உவமையாகக் கூறினால் பொருத்தமாக இருக்கும் என்றவாறு
“மயிர்வரி யோலமிடும் வண்டொழுகு எறும்பொழுகு சங்கிலி உறும்கரி பிணித்ததறியே நீலமணி சைவலம் அணுத்திரள்