அணியிலக்கணம்390
வெளிச்சமலர் நாளமும் நிலைபெறுமரோ”1" என்பது பிரபந்தத் திரட்டு.
(564)
32.மென்தோட் பேதைதன் முதுகினை வெருகந்
 தளிர்எனச் சாற்றலும் தக்க இயல்பே.
மிருதுவான தோள்களையுடைய மங்கையின் முதுகிற்கு வெண்கிடைச் செடியின் தளிரை உவமை கூறுதல் சரியான மரபாம் என்றவாறு.
(565)
33.மலைஎன, எழுஎன வழங்கும் தோள்களும்
 பாயல் ஆம்எனப் படர்தரு மார்பமும்
 காளையர்க்கு உரித்துஎனக் கழறினர் கற்றோர்.
கற்றறிந்த பாவலர்கள் குன்றுகள் எனவும், எஃகு எனவும் சொல்லப்படுகின்ற புயங்களும், படுக்கையைப் போன்று பரந்து அகன்றுள்ள மார்பும் வாலிபர்களுக்கு உரியன என்று கூறியுள்ளனர் என்றவாறு.
(566)
34.யாழ்எனும் முன்கையும், கெளிறொடு பயற்றங்
 காய்பொரு விரல்களும், காந்தள் மலர்நிகர்
 அங்கையும், கிளிமூக்கு அன்னகூர் உகிரும்
 நங்கையர்க்கு உரித்துஎன நவின்றனர் நாவலர்.
யாழைப்போன்ற முன்கரமும், கெளிற்றுமீன் மற்றும் பயற்றங்காய் போன்ற கைவிரல்களும், காந்தள் பூவைப்போன்ற உள்ளங்கைகளும், கிளியின் அலகை நிகர்த்த கூரிய நகங்களும் கன்னியர்க்கு உரியன என்பர் புலவர் என்றவாறு.
(567)
35.மேகமும், நிதிகளும், விண்ணூர்த் தருவும்,
 சிந்தா மணியும், தேனுவும் தெய்வமும்
 தினந்தொறுங் கொடுப்போன் செங்கைக்கு இணையே.
முகிலும், சங்கம் பதுமம் முதலிய நிதிகளும், வானுலகில் உள்ள கற்பக மரமும், வேண்டியதை எல்லாம் கொடுக்கும்