அணியிலக்கணம்394
என்னை?
“அகத்தி அரும்பு வாசிகையும்
 அணுகக் குனிக்கும் பூஞ்சிலையும்
 பகுத்த பிறையும் கொக்கிறகும்
 பகரும் நுதலுக்கு இணையாகும்”1
ஆதலின். உவமையாக உயர்ந்த பொருள்களே கூறப்பட வேண்டும் என்பது மரபு. “உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை”2 என்ற பண்டையோர் கண்ட நெறி இங்கு மீண்டும் வற்புறுத்தப்பட்டது.
(574)
42.பொருந்தக் கூறிய புத்துவ மைச்சொல்
 தழுவும்நா வலரும் தமர்ஆம் எமக்கே.
எக் கவிஞராலும் கையாளப்படாமல்உள்ள ஒரு புதிய உவமையானாலும் அது பொருளுக்கும் இலக்கிய மரபிற்கும் இசைந்ததாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளும் புலவர்கள் எம் இனத்தவர் ஆவர் என்றவாறு.
மரபு வழு இன்றிப் புதிய உவமைகளைப் படைப்பவர்கள் எமக்கினியர் என்கிறார். இதனால் படைப்பாளியின் மனோதர்மத்தைச் சிறைப்படுத்தும் தளைகள் வேண்டா என்றாராயிற்று.
(575)
43.நிகழ்த்தரும் கடவுள் நீதியும் கருணையும்
 இரவியும் மதியும் போலும் என்றும்,
 இயல்உமை இசைதிரு நாடகம் நாமகள்
 அனையன என்றும், அம்பரப் பெயர்கொடு
 கருநிறம் உடைத்தாய் மீனொடு காண்டலில்
 புணரியும் வானும் புரையும் என்றும்,
 பற்பல் விதமாப் பகராது உவமை
 இயல்பினைப் பகர்தரும் இந்தமட்டு அடக்கி
 உடைமை இயல்பும் உரைக்குதும் சிறிதே.