இந் நூற்பாவால் இவ் வியல்பு நிறைவு செய்யப்பட்டு அடுத்த உடைமை இயல்பிற்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்படுகிறது. (576) | உவமை இயல்பு முற்றிற்று. | இவ்விலக்கணத்தின் இப்பிரிவில் உடைமைகள் கூறப்படுகின்றன. ஒன்றைச் சிறப்பித்து அணிநலன் விளங்கக் கூறுவதற்கு அதன் உடைமைகள் யாவை என அறிதலின் இன்றியமையாமைபற்றி இஃதோர் தனி இயல்பாக உரைக்கப்பட்டது. இப்பகுதி தேவருடைமை, மாந்தருடைமை, பனுவலுடைமை என்னும் மூன்று உட்பிரிவுகளை உடையது. இவ்வியல்பின் மொத்த நூற்பாத்தொகை இருபத்தொன்பது ஆகும். | பனிரெண்டு நூற்பாக்களால்ஆகிய இப் பிரிவில் சில கடவுளரின் உடைமைகள் இன்னின்னவை எனச் சொல்லப்படுகின்றன. | 44. | வேலும், குலிசமும், சூலமும், வில்லும் | | அம்பு,வாள், கேடகம், அங்குசம், பாசம் | | தண்டமும் ஆழியும், தவளவா ரணமும், | | தகரும், மஞ்ஞையும், சேவலும், கிளியும் | | குன்றமும் கடம்பும் குல்லையும் கூதளம் | | புனலி அன்னபன் மாலையும் புலவோர் | | பகர்ந்துள பிறவும் பரம குருபரன் | | ஆகிய முருகனுக்கு அறையத் தகுமே. |
| வேலாயுதம், வச்சிரப்படை, சூலம், வில், கணை, உடைவாள், தோல், துறட்டு, பாசக்கயறு, தண்டாயுதம், சக்கரம் ஆகிய படைக் கலங்களும், பிணிமுகம் என்னும் வெள்ளை யானை, ஆட்டுக்கடா, மயில் ஆகிய மூன்று ஊர்திகளும், |
|
|