அறுவகையிலக்கணம்397
சேவற்கொடியும், (அருணகிரிநாதர் ஆகிய) கிளியும், குன்றுகளாகிய வசிப்பிடமும், நீபம், வெட்சி, கூதாளி, காட்டு மல்லிகை போன்ற பற்பல பூமாலைகளும், மேலும் கவிஞர்களால் கூறப்பட்டுள்ள மற்றவை அனைத்தும் பரமாசாரிய மூர்த்தியாகிய முருகப்பெருமானுக்கு உரிய உடைமைகள் ஆம் எனக் கூறலாம் என்றவாறு.
புலவோர் பகர்ந்துள பிற என்றது செந்நிற ஆடை, அக்கமணி, திருநீற்றுப்பூச்சு, பற்பல பொன்னாபரணங்கள் போன்றனவற்றை.
(577)
45.வானவர் தருமகள் வலக்கையில் நீலமும்,
 குறமகள் இடக்கையில் குளிர்தா மரையும்
 வீர வாகு முதற்பகர் விறலோர்க்கு
 அம்பு,வில், உடைவாள், ஆதியும் உரித்தே.
தேவருலக மகளாகிய தெய்வயானையின் வலக் கரத்தில் குவளை மலரும், வள்ளி நாயகியின் இடக்கரத்தில் தாமரையும், வீரவாகு முதலிய நவவீரர்களின் கைகளில் கணை, வில், வாள் முதலிய படைக்கலங்களும் விளங்கும் என்றவாறு.
(578)
46.அறுகும், கொன்றையும், அங்குச பாசமும்,
 அம்புலிச் சடையும், கொம்பும், கனியும்,
 ஆகுவும், மயிலும், ஆனையும், சிங்கமும்
 ஆய பரிகளும், அளவில்பே ருண்டியும்,
 மருங்கில் தோய்வுறும் வல்லவைச் சத்தியும்,
 பின்னும் பெரியோர் பேசிய பிறவும்
 களிற்று மாமுகக் கணபதிக்கு உரித்தே.
அறுகு, கொன்றை ஆகியவற்றைத் தொடுத்த மாலைகள், துறட்டி, பாசக் கயறு ஆகிய படைக்கலங்கள், ஒரு கையில் உடைந்த தந்தம், மற்றொரு கையில் மாம்பழம், பெருச்சாளி, மயில், யானை, சிங்கம் ஆகிய நான்கு வாகனங்கள், கணக்கற்ற வகைகளில் நிரம்பிய உணவு, மடியில் அமர்ந்துள்ள வல்லவை ஆகிய தேவி ஆகியவற்றோடு ஆன்றோர்களால்