அணியிலக்கணம்398
கூறப்பட்ட பல்வேறு உடைமைகளும் யானைமுகப் பெம்மானுக்கு உரியன என்றவாறு.
ஸ்ரீதத்வநிதி திரியக்ஷர கணபதி தியானத்தில் பாசம் அங்குசம் கொம்பு மாம்பழம் எனக் கூறப்பட்டதுகொண்டு கனி என்பதற்கு அவ்வாறு உரைக்கப்பட்டது.1 சில கணபதி வடிவங்களில் மாதுளங்கனியும் இடம்பெறும். விநாயகரின் மூர்த்தி பேதங்களில் பல வாகனங்கள் கூறப்பட்டுள்ளன. பெரியோர் பேசிய பிற என்றது அரவுக்கச்சு, நெற்றிக்கண், வெள்ளெருக்க மாலை, திருநீற்றுப்பூச்சு, ஒன்றிற்கு மேற்பட்ட முகங்கள் முதலியனவற்றை.
(579)
47.கொன்றையும், தும்பையும், கொக்குஇறகு, இளமதி
 கங்கை ஆதிய கவின்தரு சடிலமும்,
 வெண்டலை, என்பு, விடப்பணி, ஏனக்
 கொம்பு, கூர்மத்து ஓடுஇவை குலவிய
 மார்பும், மழுமான், வளர்கனல் சூலம்,
 கபாலம் தோய்தரு கைகளும், கரித்தோல்,
 புலித்தோல் ஆதியும், பொலிந்தவெண் ணீறும்
 முக்கணும், குயில்பொரு மொய்குழல் பாகமும்,
 இடபமும், களிறும் இவர்தல் ஆதிய
 பிறவும் பொன்மலைப் பிஞ்ஞகற்கு உரித்தே.
கொன்றைமலர், தும்பைப்பூ, கொக்கிறகு, பிறைச்சந்திரன், கங்கை முதலியன விளங்குகின்ற சடைமுடி - மண்டையோட்டு மாலை, எலும்புகளின் சரம், நஞ்சுள்ள பாம்புகளாகிய அணிகலன்கள், பன்றியின் கொம்பு, ஆமை ஓடு ஆகிய இவைகள் நிலைபெற்ற மார்பு-பரசு, மான், எரிசுடர், முத்தலைச் சூலம், பிரமனின் தலையோடு ஆகியன பொருந்திய கைகள் - யானை உரி, புலித்தோல் ஆகிய உடை - ஒளிவீசுகின்ற திருவெண்ணீற்று முழுக்கு - மூன்று கண்கள் - குயில் போன்ற இனிய மொழியை உடைய உமாதேவியார் பொருந்தியுள்ள இடப்பாகம் - விடை, அயிராவணம் என்னும் யானை ஆகிய ஊர்திகள்