ஆகிய இவையும் இன்னமும் கூறப்படுகின்ற பிறவும் கயிலை மலைச் சிவபெருமானுக்கு உரியனவாம் என்றவாறு. (580) | 48. | அங்குசம், பாசம், அகல்வாய்ப் பாம்பு | | சூலம், கபாலம் சுடர்மணிப் பைம்பூண், | | கரும்பொடு பூங்கணை, கனற்கட் சீயம், | | ஏறுஇவை முதலாம் எண்ணில்பல் பெருஞ்சீர் | | வெள்ளிவெற் பினன்பால் மேவினட்கு உரித்தே. |
| அங்குசம், பாசக்கயறு, பிளந்த வாயை உடைய அரவு, முத்தலைச்சூலம், தலையோடு, ஒலிகாலும் இரத்தினங்கள் இழைக்கப்பட்ட பசும்பொன் அணிகலன்கள், கரும்புவில், மலர்க்கணைகள், தீயைக் கக்குகின்ற சிங்கம், இடபம் ஆகிய வாகனங்கள் என்னும் இவையும் மேலும் கூறப்படுகின்ற எண்ணற்ற பெரிய சிறப்புகளும் கயிலையங்கிரியை இடமாகக்கொண்ட சிவபிரானின் இடப்பாகத்தே பொருந்திய உமாதேவிக்கு உரியனவாம் என்றவாறு. | | சாக்தேயர் கூறுகின்ற நாம ரூப பேதங்கள் மிகமிகப்பல ஆதலின் “எண்ணில் பல் பெருஞ்சீர்” என்றார். (581) | 49. | பொன்னால் ஆடையும் பூணும், பொறிஅராப் | | பள்ளியும், கலுழப் பரியும், பார்மகள் | | பூமகள் சேர்க்கையும், பொருவில் ஆழியும், | | சங்கமும், தண்டும், தனுவும், கட்கமும், | | கவுத்துவ மணியும், கடிமலர் துளவமும் | | மற்றும் பாவலர் வகுத்தபல் சிறப்பும் | | மூதுலகு அளிக்கும் முகுந்தனுக்கு உரித்தே. |
| தங்கத்தாலாகிய ஆடை அணிகலன்கள், புள்ளிகளை உடைய பாம்புப் படுக்கை, கருட வாகனம், நிலமகள் மலர் மகள் ஆகியோர் கூட்டம், இணையற்ற சுதர்சனம் என்னும் சக்கரம், பாஞ்சசன்னியம் என்னும் சங்கு, கௌமேதகீ என்னும் கதாயுதம், சார்ங்கம் என்னும் வில், நந்தகம் என்னும் உடைவாள் ஆகிய ஐந்து படைக்கலங்கள், மார்பில் கௌஸ்துபம் என்னும் மணி, மணம் வீசுகின்ற திருத்துழாய் மாலை |
|
|