அறுவகையிலக்கணம்401
52.கமலப் பூவும், கடந்தொடு மறைம்,
 ஓதிமப் பரியும், உயர்ந்தோர் கூட்டமும்
 நாமகள் சேர்க்கையும் நான்கு முகமும்
 அன்னசீர் பிறவும் அயன்தனக்கு உரித்தே.
தாமரை மலர் இருக்கை, நீர்க்குண்டிகை, வேதச்சுவடி, அன்னப்புள் ஊர்தி, உயர்ந்தவர்களின் சூழல், கலைமகளின் கூட்டம், நான்கு முகங்கள் ஆகியனவும் இத்தகைய வேறு சிறப்புகளும் பிரமதேவனுக்கு உரியன என்றவாறு.
அன்னசீர் பிற என்றதில் ஜபமாலை, சிருக்கு, தருப்பைப்புல், அபயவரதம் போன்றவை அடங்கும்.
(585)
53.புலவோர் நாவும், பூத்தவெண் கமலமும்
 பளிங்கு வடமும், படிக்கும் சுவடியும்
 கலசம் ஆதியும் கலைமகட்கு உரித்தே.
புலவர்களின் நாக்கு, மலர்ந்த வெண்டாமரை ஆகிய இருக்கையும், கரங்களில் படிகமாலை, ஏட்டுச்சுவடி, அமுத கலசம் ஆகியனவற்றை ஏந்தலும், இன்ன பிறவும் சரஸ்வதிக்கு உரியனவாம் என்றவாறு.
ஆதி என்பதனுள் அபயவரதம், வீணை, வெள்ளைப்புடவை, அன்னப்பறவை, பூரான் என்னும் ஊர்திகள் போன்றவை அடங்கும்.
(586)
54.மதியும், கிள்ளையும், வசந்தனும், குயிலும்,
 கடலும், அன்றிலும், கார்இருட் பெருக்கும்,
 வண்டும், கரும்பும், மலர்க்கணை ஐந்தும்,
 வகுள மாலையும், மங்கையர் கூட்டமும்,
 கேதகைப் பூவும், கிளத்துவ பிறவும்,
 அன்னத்து இவரும் அணங்கும் அங்கசற்கு
 உரியன வாம்என்று உரைத்தனர் உணர்ந்தோர்.
சந்திரனாகிய குடை, கிளி ஆகிய வாகனம், வசந்தன் ஆகிய தோழன், குயில் ஆகிய திருச்சின்னம், கடல் ஆகியமுரசு, அன்றில் ஆகிய காளம், கார் இருள் ஆகிய யானை, வில் நாண்