காவிநிறக் கொடி, குடை, தம் சமயநெறிக்கேற்ற மணிமாலை, தம்மால் வணங்கப்படும் தெய்வத்திற்குரிய சின்னங்களுள் ஏற்கத்தக்கன ஆகியன துறவறத்தோர்க்கு உரியன என்றவாறு. |
சைவத்துறவியர்க்கு அக்கமணிமாலையும், வைணவருக்குத் துளசிமணி மாலையும், சாக்தேயர்களுக்குப் படிகமாலையும் உரியன. சைவர்கள் திருநீற்றையும், வைணவர்கள் திருமண்காப்பையும் சின்னமாகக் கொள்வர். சிவசின்னம் என்று கூறிப் பாம்புகளையும் மண்டையோடுகளையும் அணிதல் போன்றவைகளை விலக்குவதற்காகச் சின்னங்களுள் கொளத்தகும் பாற்றும் என்றார். (589) |
57. | அரும்மறைக் கொடியும், அம்புய மாலையும், | | பொன்னிறக் கவிகையும் பூசுரர்க்கு ஆமே. |
|
ஓதுதற்கரிய வேதங்களாகிய கொடியும், தாமரைப்பூ மாலையும், பொன்வண்ணத் தமைந்த குடையும் அந்தணர்க்குரியன என்றவாறு. (590) |
58. | செந்நிறக் குடையும், செச்சைமா லிகையும் | | சரபக் கொடியும் தரைஎலாம் புரந்து | | பொரும்அவர்க்கு எமன்ஆம் புரவலர்க்கு உரித்தே. |
|
சிகப்புவண்ணக் கவிகையும், வெட்சிப்பூ மாலையும், சரபப் பறவையின் வடிவம் எழுதப்பட்ட கொடியும் உலகமக்கள் அனைவரையும் பாதுகாத்துத் தம்மோடு போர்புரிபவரை அழிக்கும் வேந்தர்களுக்கு உரியனவாம் என்றவாறு. (591) |
59. | முல்லையந் தாரொடு முத்துக் கவிகையும் | | துலைஎனப் பொறித்துள தூசுக் கொடியும் | | வணிகருக்கு ஆம்என வகுப்பது முறையே. |
|
முல்லை மாலை, முத்துக்குடை, தராசின் சின்னம் வரையப்பட்ட துணிக்கொடி ஆகியன வணிகர்களுக்கு உரியன என்று கூறுதல் மரபாகும் என்றவாறு. (592) |