யாப்பிலக்கணம்272
முச்சீரான் வந்து முடிந்தால் அது குறள்வெண்பா எனப்படும் என்றவாறு,
வெண்பாவின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டினது என முன்பே கூறப்பட்டு விட்டதாதலின் இங்கு இரண்டாம் அடியின் மூன்றாம் சீர் அத்தன்மைத்தே என்பது தானே போதரும்., இவ்வாசிரியர் எதுகை, மோனைகளைத் தனியாகத் தொடைகள் எனக் கொள்ளாமல் யாப்புவடிவின் இன்றியமையாததோர் அங்கமாகவே கொள்கிறார்.
(416)
சவலை வெண்பா
18.குறள்வெண் பாவிரண்டு அணைவது சவலை
 வெண்பா வாம்என விளம்பினர் சிலரே.
மேற்கூறிய குறள்வெண்பாக்கள் இரண்டு இணைந்து வந்தால் அதனைச் சவலை வெண்பா என்பர் என்றவாறு.
உதாரணம் வருமாறு:-
அவமிருந்தோ ராயிரம்நீத் தாண்டுகொண்ட தன்றிச்
சிவன்விழிநீ யென்றுமுரை செய்தாய்
பவமொழியச சற்றருட்கண் பாராய் பழனித்
தவகுலவே டக்குருநா தா.1
இந்நூற்பா இரு குறள் வெண்பாக்கள் இணைந்தால் சவலை வெண்பா ஆகும் எனக் கூறுகிறது. இது இப்படியே சரியாகாது, முதல் குறளின் ஈற்றுச் சீர் ஓரசைச்சீராக இல்லாமல் வெண்பாவிற்குரிய ஏனைய சீர்களில் ஒன்றாகவே அமையும் சவலை வெண்பாவின் இலக்கணத்தைச் சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால் அது தனிச்சொல் நீங்கிய நேரிசை வெண்பா ஆகும். இது அடுத்த நூற்பாவால் அறியப்படும்.
(417)