64. | மாந்தர் உடைமைஇம் மட்டில் சுருக்கிப் | | பனுவல் உடைமையும் பகருதும் சிறிதே. |
|
மனிதர்களில் சிற்சிலர்க்கு உரியனபற்றிய பகுதியை இத்துடன் சுருக்கமாக முடித்துக்கொண்டு நூல்களுக்கு உடைமைப் பொருள்கள் ஆவன பற்றியும் ஒரு சிறிது கூறுவாம் என்றவாறு. |
இந்நூற்பாவோடு இப்பிரிவு தலைக்கட்டப்பட்டு அடுத்த இயலிற்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்படுகிறது. (597) |
3. பனுவல் உடைமை இயல் |
நூல்களின் பாடுபொருள்களைப் பற்றிய சில செய்திகளைக் கூறும் இப்பிரிவு ஒன்பது நூற்பாக்களை உடையது. இஃது உடைமை இயல்பின் கடைசிப் பிரிவாகும். |
65. | குலம்நிலை அருத்தம் என்னும் மூவகைத் | | தாய்அந்த ணன்பிர்ம சாரி அறம்முதல் | | பகரும்முந் நான்கும் நூல்களுக்கு உரித்தே. |
|
அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகக்குலம் நான்கு; பிரம்மசரியம், இல்லறம், வானப்பிரத்தம், துறவு என நிலை நான்கு; அறம், பொருள், இன்பம், வீடு என உறுதிப்பொருள் நான்கு என்னும் இப்பன்னிரு பொருள்களும் நூல்களுக்குப் பாடுபொருள்களாம் என்றவாறு. |
நிலை - ஆஸ்ரமம்; அருத்தம் - புருஷார்த்தம்; வர்ணாஸ்ரம தர்மத்தையும் நால்வகை உறுதிப் பொருள்களையும் தெரிவிப்பதே நூல் என்று இந்நூலாசிரியர் தாம் வாழ்ந்த காலநிலைக்கேற்பக் கூறினார். (598) |
66. | பல்வகை நெறிகளும், தொழிலும் பண்பும் | | நூற்குஉரித்து என்று நுவன்றனர் பெரியோர். |
|
இறைவனை அடைவதற்குரிய சரியை முதலிய பற்பல வழிகளும், மனைகோலுதல், சிற்பம், மருத்துவம், சோதிடம் போன்ற தொழில்களுக்குத் தேவையான செய்திகளும், |