அறுவகையிலக்கணம்409
இங்கே கூறப்பட்டது. தூதுவனுக்குரிய பண்புகாளக இங்கே இடம்பெற்றவை திருக்குறளின் 69 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டனவாகும். அநுமன், அங்கதன், கண்ணன், கடோத்கஜன், வீரபாகு ஆகியோர் தூதுசென்ற பகுதிகள் இதற்கு இலக்கியம் ஆகும்.(601)
69.மங்கையர் ஆடலை மழையைச் சோலையை
 வெய்யிலை நிலவை விளம்பும் மற்றைய
 நலங்களைக் காவிய நாப்பண் விரித்துப்
 பேசுதல் பெருமை ஆதல் போலக்
 காளி யூட்டைக் கள்ளுக் குடியைச்
 சேரி யாதியின் செயல்களை விரித்துக்
 கூறுதல் இழிவாம் என்பது குறிப்பே.
மகளிரின் பல்வகையான ஆடல்களையும், மழையின் மாண்பையும், சோலை வளத்தையும், வெய்யிலின் கடுமையையும், நிலவின் குளிர்ச்சியையும், இன்னமும் இவ்வாறு வருணித்துக் கூறப்படுகின்ற பிற சிறப்புகளையும் காவியத்தின் நடுவில் வருணித்துக்கூறுதல் பெருமைதரும். இவ்வாறே காளி வழிபாட்டில் ஊன் படைப்பதையும், மது அருந்துவதையும் புலையர் வாழிடத்து நிகழ்ச்சிகளையும் விரிவாகப் புனைதல் சிறுமையாகும் என்பது குறிப்பாக அறியப்படவேண்டும் என்றவாறு.
கற்பவர்களின் தரத்தை உயர்த்துவதாக இலக்கியம் இருக்க வேண்டும். இதை விட்டுப் பொதுமக்கள் இலக்கியம் என்னும் பேரால் தான் தரமிழந்து விடக்கூடாது என்பது கருத்து. இந்நூற்பாவில் மங்கையர் ஆடல் என்றது விறலிவிடுதூது போன்ற நூல்களில் இடம்பெறும் பொதுமகளிரின் கற்பிகந்த கேளிக்கைகளையன்று. மகடூஉக் குணங்கள் பொலிந்துள்ள குலமகளிரின் சிறந்த ஆடல்களே நல்ல இலக்கியத்தில் இடம்பெறத்தக்கனவாம்.
இங்கு சேரி என்றது இழிந்த சாதியினர் வாழும் பகுதி என்ற பொருளில் ஆளப்படவில்லை. இவரே இந்நூலில் “என்பு, ஊன் வேண்டுநர் யாவரும் பாலைக்கு உரியார்; அன்னவர்