ஊர்ப்பெயர் சேரி; அவர் தெய்வம் அனைத்தும் அலகைத்திரளே”1 எனவும், அங்குள்ள பொருள்களாக, “கள் அரக்கு என்பு ஊன் கடிநாய் பன்றி ஆதிய கடைப்படும்”2 பொருள்களையும் கூறியுள்ளார். |
|
இந் நூற்பாவின் கருத்தையே இவ் வாசிரியர் புலவர் புராணத்தில் “பரஞ்சோதி முனியாம் சைவ தேசிகன்தான் தாம்பற்று நெறியால் விரித்து அதிற் கம்பன்றனை நம்பிக் கள்ளுண்டாட்டு உரைத்ததாம் பட்சம் அன்று என்று அருவருக்கின்றோர் அகிலமீது ஒருசிலர் உளரே”3 எனவும், திருவாமாத்தூர்த் தலபுராணத்தில், “காளி யூட்டமும் அலகையின் ஆட்டமும் கள்வர் வாளின் வன்மையும் பகர்வதாற் புண்ணியம் வருமோ?”4 எனவும் இலக்கியமாக்கிக் காட்டுகிறார். (602) |
70. | மெய்யிடை பொய்யும் பொய்யிடை மெய்யும் | | விரவக் கூறுதல் மேதகு பனுவற்கு | | உரிமை யல்லஎன்று உரைப்பது வழக்கே. |
|
உண்மையான செய்திகளைச் சொல்லிக்கொண்டு வரும்போது இடையில் கற்பனைகளை நுழைத்தலும், அவ்வாறே கற்பனைகளையே கூறுங்காலை இடையில் சில உண்மைகளை நுழைத்தலும் நல்ல தரமுடைய நூல்களுக்கு உரிய பண்பு ஆகாது என்பது மரபாம் என்றவாறு. |
இங்குப் பொய் என்றது தற்குறிப்பேற்றம், உயர்வுநவிற்சி போன்ற அணிகளாகக் கற்பித்துப் புனைந்துரைத்தலை. உண்மையான செய்திகளைத் தரவேண்டிய இடத்தில் கற்பனைகள் கலந்துவிட்டால் மெய்யான நிகழ்ச்சி எது, புனைந்துரை எது எனத்தெரியாமல் குழப்பம் ஏற்படும். இங்கு மேதகு பனுவல் என்று (வரலாறு, தத்துவம், மருத்துவம், இலக்கணம்போன்ற) |
|