அறுவகையிலக்கணம்411
செய்திகளுக்கு, முதன்மையளிக்கக்கூடிய நூல்கள் குறிப்பிடப்படுகின்றன. இக்கருத்து அடுத்த நூற்பாவால் மேலும் தெளிவாகிறது.
(603)
71.பொய்யே கூறினும் பொருந்தக் கூறலும்
 மெய்யே கூறினும் விளங்கக் கூறலும்
 காவியப் பகுதி ஆம்எனல் கணக்கே.
(புலவன் இல்லது கூறலாகப்) புனைந்துரையாகக் கூறினாலும் அது இடம் பொருள் காலத்திற்குப் பொருந்துமாறு சொல்லப்படுதலும், (உள்ளது கிளத்தலாக) உண்மையை அப்படியே உரைத்தால் அது நன்கு விளக்கமுறும் வண்ணம் சொல்லப் படுதலும் இலக்கியத்தன்மை வாய்ந்த நூல்களுக்கு உரியபண்பு ஆகும் என்றவாறு.
இங்கும் பொய் என்றது இலக்கியப் புனைந்துரை என்ற பொருளில் வந்தது. கற்பனை அறிவுக்குப் பொருத்தமாக அமையவேண்டும் என்பதும் உண்மைகள் மயக்கமின்றித் தெளிவாக்கப்படவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டன.
(604)
72.உடைமை இயல்பை உரைத்தமட்டு ஒடுக்கிக்
 கற்பனை இயல்பைக் கழறுதும் சிறிதே.
உடைமை இயல்பாகிய இப்பிரிவை இதுவரை சொல்லப்பட்ட அளவில் நிறுத்திக்கொண்டு அடுத்துக் கற்பனையின் இலக்கணத்தைச் சற்று கூறுவோம் என்றவாறு.
இந் நூற்பாவால் இவ்வியல்பு நிறைவு செய்யப்பட்டு அடுத்த கற்பனை இயல்பிற்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்படுகிறது.
(605)
III. கற்பனை இயல்பு
இப் பிரிவில் கற்பனை பற்றிய சில செய்திகள் இடம் பெறுகின்றன. 12 நூற்பாக்களாலாகிய இப்பிரிவைக் கூர்ந்து நோக்கினால் கற்பனையின் அடிப்படையாக உவமையே அமைவதைக் காணலாம். இக்கருத்து முதல் நூற்பாவிலேயே