அறுவகையிலக்கணம்413
இவ் வியல்பிலேயே, “வியனுற விளம்பிடல் அனைத்தும் கற்பனை என்னும் புலவோர் எமக்கு இனியோரே”1என்பதைப் பெர்ரியின், “It (imagination) is the full functioning of the whole mind. Through beauty the world grows and it is the business of the imagination to create the beautiful”2 என்னும் கருத்தோடு பொருத்திச் சிந்திக்கலாம்.(606)
74.எவ்வகைச் செயலையும் பொறுக்கும் எழில்தரை
 ஒவ்வோர் காலத்து ஒள்ளிய வெயிலோடு
 கூடித் தீயெனக் கொதித்துக் கொல்வது
 பேதையர் வைதுஇடும் பிச்சைஊண் உண்பார்
 மன்னரை வீரரை மலரோன் ஆதிய
 தேவரை அருள்கொடு சினம்வரிற் செகுத்தல்
 போலும்என்று உரைப்பது பொருந்துகற் பனையே.
அனைத்து நிகழ்ச்சிகளையும் பொறுமையோடு தாங்கிக் கொள்வதைத் தனக்கே உரிய அழகிய பண்பாகப் பெற்ற நிலம் சிற்சில சமயங்களில் பிரகாசிக்கின்ற வெயிலுடன் சேர்ந்து நெருப்பைப்போல் பெருஞ்சூடுற்று உயிர்களைக் கொல்வது போல் துன்புறுத்துதல் (ஞானிகளின் உண்மைநிலை அறியாத) அறிவிலிகள் வசைச்சொற்களோடு கொடுக்கும் பிச்சைச் சோற்றை இரந்து உண்பவர்கள் (ஞானிகள்) அரசர், வீரர் பிரமன் முதலிய வானவர் ஆகியோருக்குப் பெரும்பாலும் அருள்புரிவதையும், சில காலையில் கோபங்கொண்டு தண்டித் தலையும் நிகர்க்கும் என்று கூறுவது நன்றாகப் பொருந்துகின்ற கற்பனையாம் என்றவாறு.
நிலம்-ஞானி:- அகழ்வாரைத் தாங்கும் பொறையும் இகழ் வாரைப் பொறுக்கும் பொறையும் இயல்பான பொதுக் குணங்கள். நிலம் மன்னர் வீரருக்கு உணவும் அதன்மூலம் தேவருக்கு அவியும் வழங்குதல் போலவே ஞானியும் அம்மூவருக்கும் அருள்புரிகிறார். இது பொதுப்பயன். நிலம் கோடைக்காலத்தில்