அறுவகையிலக்கணம்415
உலோபியர் ஈயாத்தன்மை-கடல் தன் பரப்பினும் பயிர் வளர்க்காமல் தன் நீராலும் நேரடியாகப் பயன்தராமை. கள்வர் கவர்தல்-மேகங்கள் கவர்தல். இப்படி ஒற்றுமை காணப்பட்டது.
இந்நூற்பா கற்பனை உயர்ந்த செயல்களுக்குத்தான் பயன்படுமோ? களவு போன்ற இழிசெயல்களில் வாராதோ என்னும் ஐயமறுத்தது. உவமை “கிழக்கிடு பொருளோ டைந்தும் ஆகும்”1 என வருதல் கற்பனைக்கும் பொருந்தும்.
நூற்பாவில் எழுமுகில் என்பதனை வினைத்தொகையாக்கி வானில் எழும்புகின்ற மேகக்கூட்டம் எனினுமமையும்.
(608)
76.நற்பொருள் பொல்லார் நடுமனை புகுங்கால்
 தீயது ஆதலும் தீப்பொருள் நல்லா
 ரிடம்படில் பலர்கொண்டு ஏற்ற மாதலும்
 கடல்கொளும் நதிப்புனல் கார்கொளும் உவர்ப்புனல்
 போலும் என்கையும் பொருவில்கற் பனையே.
“பயன்படுவதற்குரிய நல்ல பொருளாக இருப்பினும் அது தீயவர்களின் வீட்டை அடைந்தால் பிறருக்குப் பயன்படாத காரணத்தால் தீயபொருளுக்கு இணையாவதும், பயனற்ற பொருள்களும் நல்லோர் கைப்பட்டால் ஏதோ ஒரு வகையில் பலருக்கும் பயன்படுவதும் ஆகிய இவை முறையே கடலில் சென்று கலக்கும் நல்ல ஆற்றுநீர் உவர்நீராக ஆதலும் மேகத்தால் முகக்கப்பெறும் கடல்நீர் தன் உவர்ப்புத்தன்மை நீங்கி உண்ணீராகி மழை வடிவம் பெறுதலும் போன்றவை ஆம்” எனினும் சிறந்த கற்பனையாகும் என்றவாறு.
சிறப்பையும், இழிவையும் தனித்தனியாகக் கற்பனை மூலம் காட்டுவதேயன்றி அவற்றை இணைத்தும் கூறலாம் என்பது இந் நூற்பாவால் பெறப்பட்டது.
(609)
77.மலைக்கே வான்முகில் வரல்போல் பெரியோ
 ரிடத்தே மெய்ப்பொருள் இணங்கும் எனலும்
 கற்பனை ஆம்எனக் கழறத் தகுமே.